285 நாள் மௌனமாக இருந்துவிட்டு இன்று இடைத்தேர்தல் ஸ்டண்ட் செய்வதாக முதல்வர் விஜய்யை திமுக விமர்சித்துள்ளது. கடந்த ஆண்டு கரூரில் மதியம் 12 மணிக்கு நடக்க வேண்டிய நிகழ்விற்கு, இரவு 7 மணி வரை மக்களைக் காக்க வைத்து, தண்ணீர் மற்றும் உணவு இன்றித் தவித்த கூட்டத்திற்குள் அனுமதி மீறி வாகனத்தைச் செலுத்தி நெரிசலை ஏற்படுத்தியது தவெகவின் பொறுப்பற்ற விளம்பர மோகம் என்று தெரிவித்துள்ளது.
குழந்தைகள் மற்றும் பெண்கள் எனப் பல உயிர்கள் பலியான போது, பொறுப்பின்றி அங்கிருந்து ஓடி மறைந்த விஜய், 285 நாட்கள் கழித்து இன்று அதே இடத்திற்குச் செல்வது பாதிக்கப்பட்ட மக்களுக்குச் செய்யும் துரோகம் எனவும் சாடியது. ஆட்சிக்கு வந்தவுடன் உண்மையை மறைக்க 19 காவல் அதிகாரிகளை இடமாற்றம் செய்ததோடு, இன்று பலியானவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்குவதாக அறிவித்திருப்பது தங்களின் குற்றத்தை மறைக்கப் பயன்படுத்தும் மலிவான வாக்குக் கமிஷன் நாடகம் என விமர்சிக்கப்பட்டுள்ளது.

குதிரை பேரத்தில் வாங்கப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ.வின் தொகுதியில் இடைத்தேர்தலை வெல்ல, உயிரிழந்தவர்களின் ரத்தத்தின் மீது நின்று அரசியல் செய்வது விஜய்யின் அதிகாரத் திமிரையும், நிர்வாகச் சீர்கேட்டையும் அப்பட்டமாகக் காட்டுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திடீரென நீக்கப்பட்ட ‘விடியல்’... தாறுமாறு வைரலான வீடியோ.. பதறியடித்துக் கொண்டு விளக்கம் கொடுத்த அதிகாரிகள்...!
என்னை வரவிடாமல் தடுத்தனர் என்று மேடையில் அழும் நாடகத்தை நிறுத்திக் கொள்ளுங்கள் என்றும் அங்கிள் விஜய் அவர்களே., உங்கள் கைகளில் படிந்திருக்கும் ரத்தக் கறை, அரசு வேலை கொடுக்கும் இந்த இடைத்தேர்தல் ஸ்டண்ட் நாடகத்தால் என்றும் மறந்துவிடாது என கூறியுள்ளது.
இதையும் படிங்க: காங்கிரஸ் பொறுப்பா நடக்கணும்..! காவிரி நீர் பிரச்சனை..! கனிமொழி கண்டனம்..!!