பள்ளிக்கூடம் அறிவை வளர்க்கத்தான் என்றும் உங்கள் அரசியல் புகழ் பாடுவதற்கு அல்ல எனவும் முதல்வர் விஜயின் இன்றைய கரூர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை பள்ளியில் நேரடி ஒளிபரப்பு செய்த காட்சிகள் வெளியாக்கிய நிலைகள் திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே பள்ளிகளில் முதல்வர் விஜயின் புகைப்படத்தை மாட்டி தமிழக வெற்றி கழகத்தினர் அராஜகம் செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இன்று வெளியான வீடியோ மேலும் பதற்றத்தை அதிகரித்து உள்ளது. இந்த நிலையில், தொடர்ந்து அரசுப் பள்ளிகளில் தங்கள் அரசியல் கைவரிசையைக் காட்டி வந்த தவெகவினர், இன்று உச்சகட்டமாக முதலமைச்சர் விஜய் பேசுவதை நேரடி ஒளிபரப்பு செய்து அராஜகம் செய்துள்ளனர். சிறு பிஞ்சு நெஞ்சுகளில் உங்கள் சுயநல அரசியல் நஞ்சை விதைக்க உங்களுக்கு எவ்வளவு துணிச்சல் என்று கேட்டுள்ளது.

ஆங்கரிங் வேலை செய்வதற்கு மட்டும்தான் இருக்கிறீர்களா அல்லது உண்மையிலேயே நீங்கள்தான் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரா? என அமைச்சர் ராஜ்மோகனுக்கு கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. பள்ளி வளாகத்தில் அரசியல் செய்யக்கூடாது என்று ஊடகங்களுக்கு ஒப்புக்கு பேட்டி கொடுத்துவிட்டு, திரைமறைவில் நாடகமாடுவதை நிறுத்துங்கள். உங்கள் வெற்று பேட்டிகளால் இங்கே எந்த மாற்றமும் வரப்போவதில்லை. குழந்தைகளிடம் அரசியல் விளம்பரம் தேடும் இந்தத் தரங்கெட்ட செயலை செயலிலும் தடுத்து நிறுத்திக் காட்டுங்கள் என்று கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஹப்பாடா! நிம்மதி பெருமூச்சு விடும் செந்தில்பாலாஜி!! கோர்ட் உத்தரவால் கிடைத்தது மகிழ்ச்சி!
அரசியல் செய்ய ஆயிரம் மேடைகள் இருக்கின்றன என்றும் அங்கே போய் உங்கள் புகழைப் பாடிக்கொள்ளுங்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வகுப்பறைகளை உங்கள் சுய விளம்பரக் களமாக மாற்ற நினைத்தால் தமிழ்நாட்டு மக்கள் சும்மா இருக்க மாட்டார்கள் என்று கூறியுள்ளது.
இதையும் படிங்க: ஊரடிச்சு உலையில் போட்ட திமுக..! எத்தனை பேரு மாட்ட போறாங்களோ..! எச்சரித்த CM விஜய்..!