தமிழக வெற்றிக் கழகம், தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் புதிய அத்தியாயமாக உருவெடுத்து, மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வரும் ஒரு அரசியல் கட்சி. இதன் முதல் மாநில மாநாடு 2024 அக்டோபர் 27 அன்று விழுப்புரம் மாவட்டத்தின் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாடு, தமிழக அரசியல் களத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது. இந்நிலையில், தற்போது இக்கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு இன்று மதுரையில் மிக பிரம்மாண்டமாக நடைபெறுகிறது.
மதுரை மாவட்டம் பாரபத்தியில் இன்று மாநாடு பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. மாநாட்டிற்காக பாரப்பத்தி கிராமத்தில் 500 ஏக்கர் பரப்பளவில் மிகப் பிரமாண்டமான திடல் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக அலைக்கடலென தொண்டர்கள் குவிந்துள்ளனர். இது தவெக-வின் மக்கள் செல்வாக்கை பிரதிபலிக்கிறது. மக்களின் பாதுகாப்பு மற்றும் வசதிக்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 200 செவிலியர்கள் உட்பட 600 மருத்துவ ஊழியர்கள் அவசர மருத்துவ உதவிக்காக தயார் நிலையில் இருப்பார்கள். மாநாட்டு இடத்தில் போதிய பாதுகாப்பு, போக்குவரத்து மற்றும் தங்குமிட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மாநாடு 4 மணிக்கு தொடங்கும் என கூறப்பட்ட நிலையில் முன்னதாகவே தொடங்கப்பட்டுள்ளது. விஜயின் பெற்றோர்களான சந்திரசேகர் மற்றும் ஷோபா ஆகியோர் மேடைக்கு வந்தனர். அவர்களுக்கு தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளின் அறிமுகம் செய்து வைத்தனர். தவெக தலைவர் விஜய் இந்த மாநாட்டில் தனது கட்சியின் எதிர்கால திட்டங்கள், கொள்கைகள் மற்றும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அவரது அரசியல் உத்திகள் குறித்து முக்கியமான அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநாட்டின் மூலம் தமிழக மக்களுக்கு, குறிப்பாக இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு, புதிய நம்பிக்கையையும் உத்வேகத்தையும் ஏற்படுத்துவதை தவெக நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதையும் படிங்க: வேலை வெட்டி இல்ல போல! மீண்டும் மீண்டும் விஜயை சீண்டும் சீமான்
இதையும் படிங்க: #BREAKING: மதுரையில் விஜய்... பிரம்மாண்டமாக தொடங்கியது தவெக மாநாடு! பரபரக்கும் அரசியல் களம்