கரூர் விவகாரத்திற்குப் பிறகு எப்படியாவது விஜயை தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என அதிமுக, பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் போட்டா போட்டி முயன்று வருகின்றன. சமீபத்தில் டெல்லியில் இருந்து வந்த பாஜக மேலிட பொறுப்பாளர்கள் கூட “எப்படியாவது விஜயை அதிமுகவுடன் கூட்டணி வைக்க வைத்துவிடுங்கள்” என எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனிடையே எடப்பாடி பழனிசாமியும் பலமுறை தவெகவிற்கு கூட்டணி தூது அனுப்பிவிட்டதாகவும், தனித்து தான் போட்டியிடுவேன் என விஜய் விடாப்பிடியாக மறுத்ததாகவும் தகவல்கள் வெளியாகி வந்தன. இது எல்லாம் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழக்கும் வரையில் தான். இந்த சம்பவத்தில் சிக்கித் தவிக்கும் தமிழக வெற்றிக் கழகத்தை மீட்க விஜய்க்கு டெல்லியின் சப்போர்ட் தேவை என்பதால் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க இறங்கி வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த கூட்டணி விவகாரம் குறித்து விஜயுடன் இரண்டு முறை எடப்பாடி பழனிசாமி போனில் பேசியதாக தகவல்கள் வெளியான நிலையில், இன்று தவெகவுடன் கூட்டணியே அமைந்துவிட்டது போல் எடப்பாடி பழனிசாமி பேசிய கருத்தைக் கேட்டு அதிமுகவினர் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க: நான்தான் அடிச்சேன்... ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கியதாக சரணடைந்த தவெக நிர்வாகி...!
நேற்று குமரபாளையம் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசிக்கொண்டிருந்த போது, அதிமுக, பாஜக கொடிகளுக்கு நடுவே தவெக கொடியும் பறந்தது. அந்தக் கொடியைச் சுட்டிக்காட்டிய இபிஎஸ் சிரித்துக்கொண்டே, “பாருங்க… கொடி பறக்குது… கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போட்டாங்க…” எனக்கூறினார். இதனால் கூட்டத்தில் ஆராவாரம் ஏற்பட்டது மட்டுமல்ல, தமிழக அரசியலிலும் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

சரி இதில் என்ன ஆச்சர்யம் இருக்கு, ஏற்கனவே கரூர் விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். விஜயும் தான் வெளியிட்ட வீடியோவில் அதற்கு நன்றி தெரிவித்தார். அப்போதே கூட்டணிக்கு கிரீன் சிக்னல் காட்டிவிட்டார் என்று தானே அர்த்தம் என அரசியல் விமர்சர்கள் தெரிவித்தனர்.
ஆனால் இந்த தவெக கொடி பறந்த விவகாரத்தில் , “தலைக்கு மேல இருக்குற கொண்டையை மறந்துட்டீங்களே இபிஎஸ்” என நெட்டிசன்கள் கலாய்க்கும் அளவிற்கு தரமான சம்பவத்தை அதிமுக ரத்தத்தின் ரத்தங்கள் செய்துள்ளனர். பொதுவாக கூட்டணி கட்சியின் பொதுக்கூட்டம் அல்லது மாநாட்டில் பங்கேற்றும் தோழமை கட்சியினர் கையில் தங்களது கட்சிக்கொடிகளை எடுத்துச் செல்வார்கள். அதாவது கூட்டணி பலத்தைக் காட்டுவதற்காக அப்படி செய்வார்கள். கையில் கொடி மட்டுமல்ல, வேஷ்டி, தோளில் போட்டிருக்கும் துண்டு என அனைத்துமே அவர்கள் கட்சியுடையதாக இருக்கும். ஆனால் எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டிய தவெக கொடியை அதிமுகவைச் சேர்ந்த நபர் ஒருவர் கையில் ஏந்தியிருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.
சொந்தக் கட்சி தொண்டனை இன்னொரு கட்சிக் கொடியை காட்ட வெச்சு, பேசி கைதட்டல் வாங்குற அளவுக்கு அதிமுக ஆனது பரிதாபம் தான்...
எடப்பாடி என்னும் ஆளுமை... த்துஊ...#அடிமையின்பயணம் pic.twitter.com/jD0ARCWXW0
— Rajiv Gandhi Ka (@RajivGandhi_Ka) October 9, 2025
கையில் தவெக கொடியை வைத்திருக்கும் அந்த நபர், தோளில் அதிமுக துண்டை அணிந்திருக்கும் போட்டோவை திமுக நிர்வாகி ராஜீவ் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அத்துடன் “சொந்தக் கட்சி தொண்டனை இன்னொரு கட்சிக் கொடியை காட்ட வெச்சு, பேசி கைதட்டல் வாங்குற அளவுக்கு அதிமுக ஆனது பரிதாபம் தான்...” என்றும் பதிவிட்டுள்ளார். சோசியல் மீடியாவில் இந்த போட்டோ வேகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: “ஆப்பு அண்ட் ஆதரவு” ஒரே இடத்தில் இருந்தா?... நொந்து போன விஜய்... சல்லி சல்லியாய் நொறுங்கும் இமேஜ்...!