பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், தவெக கட்சியின் நிர்வாகிகள் மீது சுமத்தப்பட்டுள்ள அபராதம் தொடர்பாக கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள நிலையூர் கருவேலம்பட்டி பகுதியில் அரசு புறம்போக்கு நிலம் மற்றும் அனுமதிக்கப்பட்ட அளவை மீறிய குவாரி நடவடிக்கைகள் தொடர்பான வழக்கில், தவெக நிர்வாகிகள் பாரி மற்றும் முருகேசன் ஆகியோருக்கு திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் ரூ.7.5 கோடி அபராதம் விதித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தியை சுட்டிக்காட்டி உள்ளார்.
இது தூய சக்தியின் ஆட்சி என்று கூறிக்கொள்ளும் தவெக நிர்வாகிகளின் நிஜ முகத்தை வெளிப்படுத்தியிருப்பதாக குறிப்பிட்டார்.கனிம வளத்தைச் சுரண்டி கோடிக்கணக்கில் அபராதம் கட்டுவதுதான் தவெகவின் தூய ஆட்சியா என்று கேள்வி எழுப்பிய வானதி சீனிவாசன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரடியாக சாடினார்.

என் கட்சியினராக இருந்தாலும், அமைச்சர்களாக இருந்தாலும் ஊழல் செய்தவர்களை விடமாட்டேன் என்று சட்டப்பேரவையில் வீர வசனம் பேசிய முதல்வர், சட்ட விரோதமாக கனிம வளங்களைச் சுரண்டி குற்றச்சாட்டுக்கு உள்ளாகி கோடிக்கணக்கில் அபராதம் எதிர்கொள்ளும் தனது கட்சி நிர்வாகிகளுக்கு அந்த தூய ஆட்சிக் கொள்கை பொருந்துமா என்று கேட்டார்.இந்த விவகாரத்தில் சட்டவிரோத கனிமவளச் சுரண்டலில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: பாஜக பொறுப்பாளர்கள் நியமனம்...! தமிழக EX. MLA வானதிக்கு ஆந்திராவில் பொறுப்பு.! தலைமை முக்கிய முடிவு..!!
தூய ஆட்சி என்ற பெயரில் மக்களுக்கு வாக்குறுதி அளிக்கும் அரசியல் கட்சிகள், தங்கள் நிர்வாகிகள் மீது இதுபோன்ற குற்றச்சாட்டுகள் எழும்போது மௌனம் சாதிப்பது ஏற்புடையதல்ல என்றும் அவர் தெரிவித்தார். அரசு நிலங்களையும் இயற்கை வளங்களையும் பாதுகாப்பது அரசின் முதன்மைக் கடமை என்பதை வலியுறுத்திய வானதி சீனிவாசன், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்வதை தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: பாரபட்சமில்லாத விசாரணை..! சிறுமிகளை சீரழித்த கொடுமை.! வீரமணி விவகாரத்தில் வானதி சீனிவாசன் முக்கிய கோரிக்கை..!!