சட்டப்பேரவையில் பேசிய சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா இளைஞர்களை சீர்குலைக்கும் வகையில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்பட்டதற்கு பதிலாக 50 கோடி ரூபாயை அலங்காநல்லூர் சர்க்கரை ஆலைக்கு வழங்கியிருந்தால் விவசாயிகள் பயன் பெற்றிருப்பார்கள் என கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக அதிமுகவும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தனர்.
இந்நிலையில் தான் பேசியது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா, திமுக ஆட்சியில் தடையில் இருந்த ஜல்லிக்கட்டு போட்டியை நான் ஏற்கனவே 2011- 16ஆம் ஆண்டுகளில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தியுள்ளேன்.
நான் எப்போதும் ஜல்லிக்கட்டுக்கு எதிராக இருக்கவே மாட்டேன் நானும் மாடுபிடி வீரர்தான் எனவே இளைஞர்களை எனக்கு எதிராக திருப்பி விட பார்க்கிறார்கள். இளைஞர்கள் எப்போதும் முதலமைச்சர் விஜய்க்கு ஆதரவாக இருப்பவர்கள் தான் நான் பேசியது ஜல்லிக்கட்டு மைதானத்தை அமைத்து போட்டி நடத்தினால் வெளிநாடுகளைப் போன்று ஒரு மைதானத்திற்குள்ளேயே இளைஞர்களின் திறமையை அடக்குவது போல அமைந்துவிடும் என பேசினேன்.
இதையும் படிங்க: காங்கிரசுக்கு மானம், ரோஷம் இல்லையா.? விஜய் பவன்-னு மாத்திக்கோங்க.! திமுக Ex. MLA விளாசல்.!
ஜல்லிக்கட்டு மைதானம் என்பது கால்நடைத்துறைக்கு சொந்தமான இடத்தில் அமைக்கப்பட்ட நிலையில் கால்நடை துறையிடம் இதுவரை அந்த இடம் ஒப்படைக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
மேலும் மைதானத்திற்கு ஒதுக்கிய 50 கோடி ரூபாயை அலங்காநல்லூர் சர்க்கரை ஆலைக்கு ஒதுக்கீடு செய்திருந்தால் பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்தார்.
இந்த ஆண்டுகள் ஜல்லிக்கட்டு போட்டியானது வெளிப்படை தன்மையுடன் நடைபெறும் எனவும் எந்த வித குளறுபடியும் இல்லாமல் ஜல்லிக்கட்டு போட்டி பாரம்பரிய முறைப்படி நடத்தப்படும் என்றார். இளைஞர்களின் போராட்டங்களுக்கு பின்பு கிடைத்த ஜல்லிக்கட்டு போட்டி குறித்து நான் எப்படி தவறாக பேசுவேன் எனவே நான் பேசியது குறித்து திரித்து தற்போது பேசப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
இதையும் படிங்க: பழனி நில விவகாரம்... ஆதாரம் எங்கே.? திமுகவுக்கு நறுக்கென குட்டு..! நக்கலடித்த தவெக..!