சென்னை புழல் அடுத்த ரெட்டேரியில் தவெக சார்பில் நடைபெற்ற கொள்கை விளக்க தெருமுனை கூட்டத்தில் அக்கட்சியின் பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் பங்கேற்று பேசினார். எந்த தலைவருக்கும் வராத கூட்டம், எங்கள் தலைவருக்கு வருகிறது எனவும், ஈரோட்டில் விஜய் பேச அனுமதி கேட்டால் தமிழ்நாடு அரசு 82 நிபந்தனைகளை விதிக்கிறது என்றும் நாஞ்சில் சம்பத் பேச அனுமதி கேட்டால், ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்வாயா, மருத்துவமனை ஏற்பாடு செய்வாயா என கேட்கிறார்கள் எனவும், இந்த நாய்களிடம் சிக்க வேண்டாம் என்று தெருமுனை கூட்டம் போட்டுள்ளோம் என கூறினார்.
எங்கள் கட்சிக்கு நிபந்தனை போடுகிறீர்களே, சீமானுக்கு நிபந்தனை போடுகிறீர்களா? என தமிழ்நாடு அரசிடம் கேள்வி எழுப்பினார். தமிழக வெற்றி கழகத்திற்கு நெருக்கடி கொடுக்கிறது தமிழ்நாடு அரசு எனவும், திமுக, அதிமுக தவிர வேறு கட்சி தமிழ்நாட்டில் இருக்க கூடாது என நினைக்கிறார்கள் என்றும், ஜனநாயகனுக்கு எதிராக பராசக்தி திரைப்படத்தை இயக்கினார்கள் எனவும், சிவகார்த்திகேயன் இந்த நாய்களிடம் சிக்கி கொண்டார் எனவும், பராசக்தி நடிக்க ஒப்புக்கொண்ட போதே உனக்கு சனி பிடித்து விட்டது எனவும், எந்த கோவிலுக்கு போனாலும் ஜென்ம சனி விடாது என்றார்.
சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய ஒரே கட்சி தமிழக வெற்றி கழகம் மட்டுமே எனவும், ஆட்சிக்கு வந்தால் முதியோர் துறையை நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருப்பேன் என விஜய் அறிவித்தார் என்றும், ராணி வேலு நாச்சியார் படை, அஞ்சலையம்மாள் விரைவு நீதிமன்றம், ஆண்டிற்கு 6 சிலிண்டர் இலவசம் என பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளதாகவும், திமுக ஆட்சியை விசில் வீட்டிற்கு அனுப்பும் என பார்த்தால், சிலிண்டரே வீட்டிற்கு அனுப்பி விடும் போல உள்ளது என்றார். எங்களது கட்சி தலைவரை அழுக்காக்க முயற்சிக்கிறார்கள் எனவும், எச்சில் துப்பி, எரிமலை அணைவதில்லை என்றார்.
இதையும் படிங்க: "பிம்பிளிக்கி பிளாப்பி"..! பிளாப் ஆகப்போகுது தமிழ்நாடு... சீமான் கலாய்..!!
இந்தியாவில் அமீர்கானை விட அதிக ரசிகர்களை கொண்டவர் விஜய் எனவும், 300 கோடி ரூபாய் வருமானத்தை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்துள்ளார் எனவும், அவரை இயங்க விடாமல் வைப்பதற்காக அவர் மீது கல் எறிகிறார்கள் என குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: பிஞ்சு குழந்தை முதல் மூதாட்டி வரை பாலியல் வன்கொடுமை..! கதறல் சத்தம் நெஞ்சை கிழிக்குது..!! சீமான் கண்டனம்