சேலம் அருகே நூறு நாள் வேலை திட்டத்தில் பணியாற்றிய பெண்களிடம் , மது போதையில் அரிவாளுடன் சென்று மிரட்டிய தவெக பிரமுகர். நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் தவெக கட்சியினர் மட்டுமே பணி புரிய வேண்டும் என்று கூறி மிரட்டியதாக தகவல். பெண்கள் சூழ்ந்து கொண்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் திரும்பி சென்ற தவெக பிரமுகர். பெண்களுக்கு தவெக- வினரிடம் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவி வருவதாக பெண்கள் அச்சம்
சேலம் மாவட்டம் கருப்பூர் அருகே உள்ள வெள்ளாளப்பட்டி பகுதியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் அந்த பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிந்து கொண்டிருந்த போது , அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த தவெக பிரமுகரான சக்தி என்பவர் இந்த பணியில் ஆளுங்கட்சிணர் மட்டுமே ஈடுபட வேண்டும் என்றும் மற்றவர்கள் பணி செய்யக்கூடாது என்று கூறி மிரட்டி உள்ளார்.
மது போதையில் இருந்த அவர் தமது இருசக்கர வாகனத்தின் வைத்திருந்த அரிவாளை எடுத்து காண்பித்து பெண்களை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பெண்கள் உடனடியாக செல்போனை எடுத்து பதிவு செய்ய முற்படும் போது அறிவாளை வாகனத்தில் வைத்து அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதையும் படிங்க: தவெக தாவிய அதிமுக மாஜிக்களுக்கு ஆப்பு வைக்க இபிஎஸ் திட்டம்! டெல்லிக்கு கைமாறும் ஊழல் ஆவணங்கள்!
அப்போது அங்கு பணிபுரிந்த பெண்கள் அனைவரும் அவரை சூழ்ந்து கொண்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. மது போதையில் பட்டப் பகலில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிபுரியும் பெண்களை தவெக பிரமுகர் சக்தி அரிவாளை காட்டி மிரட்டிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெண்களுக்கு ஆளுங்கட்சியான தவெக- வினரிடமே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவி வருவதாக அந்த பகுதியை மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையும் படிங்க: சம்மனை மதிக்காத செந்தில் பாலாஜி..? ஆஜராகாததால் புதிய சிக்கல்..! போலீசின் அடுத்த நகர்வு என்ன..?