கரூர் கோரச் சம்பவம் மனதில் நீங்காத வடுவாக மாறியது. வரலாற்றுப் பெரும் கொடுமையாக உருவெடுத்துள்ளது. விஜய் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
கரூரில் உள்ள வேலுசாமிபுரத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் விஜயை நேரில் காண வந்தனர். போலீஸ் அனுமதி மனுவில் 10 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்பார்கள் என்று குறிப்பிட்டிருந்த போதிலும், உண்மையில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் திரண்டனர், விஜய் 6 மணி நேரம் தாமதமாக வந்ததால், வெயில் வாட்டும் பகலில் காத்திருந்த மக்கள் சோர்வடைந்தனர். மேலும், அந்த இடத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

குழந்தைகள், பெண்கள் உட்பட அப்பாவிகள் பலியான இந்த அனர்த்தம், விஜயின் அரசியல் வாழ்க்கையின் முதல் பெரிய சோதனையாக மாறியுள்ளது. ஆனால், இது வெறும் விபத்தா அல்லது திட்டமிட்ட சதியா என்பது குறித்து தவெக கட்சி முன்வைக்கும் கருத்துகள், அரசியல் களத்தில் புதிய சர்ச்சையைத் தூண்டியுள்ளன. விஜய்க்கு இதில் எந்தத் தொடர்பும் இல்லை என வலியுறுத்தும் இந்தக் கருத்து, அரசின் பொறுப்பின்மை மற்றும் சதி யதார்த்தங்களை வெளிப்படுத்த முயல்கிறது.
இதையும் படிங்க: #biharelection: சூடுபிடிக்கும் களம்... பாஜக தேர்தல் பொறுப்பாளராக தர்மேந்திர பிரதான் நியமனம்...!
இந்த நிலையில் தமிழக பாஜக மாநில செயலாளர் அமர் பிரசாத் ரெட்டி விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக கேள்விப்பட்டதாகவும் விரைவில் குணமடைய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். நீங்கள் அனுபவித்து வரும் அதிர்ச்சியை தான் முழுமையாக புரிந்து கொள்வதாகவும் தயவு செய்து உங்களது உடல் நலத்தையும் கவனத்தில் கொள்ளுங்கள் எனவும் கேட்டுக் கொண்டார்.
இதையும் படிங்க: அறிவார்ந்த பெண் அதிகாரியை காப்பாற்ற முடியவில்லையே... பீலா வெங்கடேசன் குறித்து தமிழிசை உருக்கம்...!