அடுத்த ஆண்டு நடக்கும் சட்டமன்றத் தேர்தலை மையமாகக் கொண்டு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை உற்சாகத்துடன் தொடங்கி நடத்தி வந்தார். அலைக்கடலென மக்கள் கூட்டம் திரண்டு விஜய்க்கு பேராதரவு கொடுத்தனர். இந்த உற்சாகம் நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். காரணம் கரூர் மாவட்டத்தின் நிகழ்ந்த ஒரு துயர சம்பவம். கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தேர்தல் சுற்றுப்பயணத்தை நடத்தினார்.
விஜய் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 41 உயிர்கள் அனாமத்தாக பறிபோனது. மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்துவதுடன் நாட்டை உலுக்கியது. இதனால் முடங்கிப் போன தமிழக வெற்றிக் கழகம் மெல்ல மீண்டு வருகிறது. கட்சியை பலப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில், தவெக தொண்டர் அணிக்கு ஆலோசனை வழங்க ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டது. ஓய்வு பெற்ற ஐஜி ரவிக்குமார் தலைமையில் குழு அமைத்துத் தொண்டர் அணிக்கு வழிகாட்ட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: "புதுசா கட்சி ஆரம்பிச்ச உனக்கே இவ்வளவு அதப்புன்னா... எங்களுக்கு எவ்வளவு இருக்கும் ..." - மீண்டும் விஜய்யை சீண்டிய உதயநிதி...!
ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள் பத்துக்கும் மேற்பட்ட குழுவில் இடம் பெற்றனர். கட்சிப் பணிகளை இந்த தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், தவெகவில் EX-MLA-க்கள் ஐக்கியம் ஆகி உள்ளனர். புதுச்சேரி பாஜக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சாமிநாதனும், காரைக்கால் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அசனாவும் தவெகவில் இணைந்தனர்.
இதையும் படிங்க: " பிரதமர் மோடிக்கு முன்னாடி நீயெல்லாம் ஒரு ஆளே இல்ல..." விஜயை மறைமுகமாக விளாசிய நயினார் நாகேந்திரன் ...!