தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளில் பயின்ற சுமார் எட்டு லட்சம் மாணவ, மாணவிகள் எழுதிய உயர்நிலை வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இந்த அறிவிப்பு மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டு +2 தேர்வுகள் மார்ச் மாதம் 2ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை நடைபெற்றன. பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 95.20% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் டூ பொதுத்தேர்வில் 7.53 லட்சம் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றதாக தேர்வுகள் துறை இயக்ககம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டும் வழக்கம் போல் மாணவிகளை அதிக அளவில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில், விடாமுயற்சியால் வெற்றிக் கனியைச் சுவைத்த என் அன்புத் தம்பி, தங்கைகளுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள் என்று கூறினார்.
இதையும் படிங்க: திமுக தயவில் அதிமுக ஆட்சியா..? வாய்ப்பில்ல ராஜா..! கைவிரித்த டிகேஎஸ் இளங்கோவன்..!
இந்த வெற்றி, உங்கள் கடின உழைப்பிற்குக் கிடைத்த அங்கீகாரம். உயர்கல்வி எனும் அடுத்த கட்டத்தை நோக்கி, நம்பிக்கையுடன் அடி எடுத்து வையுங்கள். அதே நேரத்தில், வெற்றி பெறத் தவறியவர்கள் மனம் தளர வேண்டாம். மீண்டும் முயற்சி செய்யுங்கள். வெற்றியின் அருகில்தான் இருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். உங்கள் அனைவரின் எதிர்காலமும் பிரகாசிக்கட்டும் என்றும் நல்லதே நடக்கும்., வெற்றி நிச்சயம் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: விஜய் சர்க்கார் தானா..? பெரும் எதிர்பார்ப்பு..! திருமாவளவன் பேட்டி..!!