தாராபுரம் தொகுதியில் 18 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், தேர்தல் அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்ய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 206 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், ஆறு பறக்கும் படை மற்றும் ஆறு நிலை கண்காணிப்புக் குழுக்கள் மூலம் கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனிடையே, காலை 9 மணி நிலவரப்படி தாராபுரம் தொகுதியில் 17.55 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.
இதனால், வாக்காளர்கள் அமைதியாக வாக்களித்து வரும் நிலையில், வாக்குச்சாவடிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் கட்சியினருக்கு இடையே எழுந்துள்ள வாக்குவாதங்கள் மற்றும் புகார்கள் தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக தவெகவினர் தாராபுரத்தில் நேற்று வாக்காளர்களுக்கு புடவை, காமாட்சி விளக்கு உள்ளிட்ட பரிசு பொருட்களையும், பணத்தையும் விநியோகித்ததாக திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றச்சாட்டின.
இதையும் படிங்க: பைக் ரேஸ் பின்னணியில் போதைப்பொருள் வலையமைப்பா..? சந்தேகத்தை கிளப்பிய வேல்முருகன்..!!
இன்று காலை தாராபுரத்தில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா மற்றும் டோக்கன் விநியோகித்ததாக தவெகவினரை பாஜகவினரும், அதிமுகவினரும் மடக்கிப் பிடித்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனிடையே, தாராபுரம் இடைத்தேர்தலில் ஒரு ரூபாய்க்கூட கொடுக்கவில்லை என அமைச்சர் விஜய் பாலாஜி உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாநகராட்சி குட்பட்ட சூளை பாரதி நகர் பகுதியில் மழைக்காலங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புப் பகுதிக்குள் மழைநீர் மற்றும் கழிவுநீர் புகுந்து மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இது குறித்து அப்பகுதி மக்கள் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து, அமைச்சர் விஜய் பாலாஜி ஆணையாளர் மற்றும் அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் .
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜய் பாலாஜி, இடைத்தேர்தல் என்றாலே திருமங்கலம் ஃபார்முலா என்று தான் எல்லோரும் சொல்வார்கள். இன்று அதனை உடைத்து மக்களிடம் ஆளும் கட்சியாய் இருந்து ஒரு ரூபாய் கூட பணம் கொடுக்காமல் மிகப்பெரிய வெற்றி வாய்ப்பை அடையப்போகிறோம்.
சொல்பவர்கள் சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.தாரபுரம் இடைத் தேர்தலில் த.வெ.க கூட்டணி 1-லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.
தைப்பொங்கலையொட்டி வழங்கப்படும் இலவச வேஷ்டி, சேலை உற்பத்திப் பணிகள் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் மிகச் சிறப்பாகவும் விரைவாகவும் நடைபெற்று வருகின்றன. இதற்காகத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
பழைய காய்கறி மார்க்கெட் பகுதியை மீண்டும் பயன்படுத்த வியாபாரிகள் அளித்த மனு மீது மாநகராட்சி ஆணையர் பேச்சுவார்த்தை நடத்தி, தகுந்த தீர்வு காண ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
ஈரோடு மாநகராட்சி உட்டபட்ட பகுதிகளில் பூட்டப்பட்டுக் கிடக்கும் மாநகராட்சிப் பூங்காக்களைப் பார்வையிட்டு, அவற்றை மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வரத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.
இதையும் படிங்க: “விசில் சின்னத்துக்கு ஓட்டு போடுங்கம்மா!” – தேர்தல் அலுவலர் சொன்னதாக புகார்; தாராபுரத்தில் வாக்குப்பதிவு நிறுத்தம்!