தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 இல் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் தனது முதல் தேர்தல் அனுபவத்தை பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் தொடங்கினார். இந்தத் தொகுதி வட சென்னையின் தொழிலாளர் பகுதியாக அறியப்படுகிறது. இங்கு பாரம்பரியமாக தி.மு.கவுக்கு வலுவான அடித்தளம் உள்ளது. விஜய் இந்தத் தொகுதியைத் தேர்ந்தெடுத்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அவர் திருச்சி கிழக்கு தொகுதியிலும் போட்டியிட்டார்.
பெரம்பூர் தொகுதி வரலாற்று ரீதியாக தி.மு.கவின் கோட்டையாகக் கருதப்படுகிறது. 2021 தேர்தலில் தி.மு.க வேட்பாளர் ஆர்.டி. சேகர் 1,05,267 வாக்குகளுடன் (52.5% வாக்கு சதவீதம்) வெற்றி பெற்றார். அ.தி.மு.க வேட்பாளரை விட சுமார் 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றார். 2016இல் இந்தத் தொகுதியில் இறுக்கமான போட்டி நிலவியது.

இம்முறை தேர்தலில் வாக்கு பதிவு சதவீதம் கணிசமாக உயர்ந்து சுமார் 89.7% ஆக பதிவானது. இது முந்தைய தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் மிக உயர்ந்த அளவு. த.வெ.க தலைவர் விஜய் தனது கட்சியின் 234 வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்தபோது பெரம்பூர் உள்ளிட்ட இரு தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்தார். இது அவரது அரசியல் அறிமுகத்திற்கு முக்கியமான நகர்வாக பார்க்கப்பட்டது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மாற்றத்தின் புயல்: பழைய அரசியல் மரபுகள் வீழ்ச்சி! - ஆதவ் அர்ஜுனா..!!
ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்த நிலையில் மே நான்காம் தேதியான இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் விஜய் அங்கு முன்னிலை வகித்து வருகிறார். திருச்சி கிழக்கு தொகுதியில் சற்று பின்னடைவை சந்தித்து இருக்கும் விஜய் பெரம்பூர் தொகுதியில் முன்னிலை பெற்றுள்ளார். தபால் வாக்கிலும் திமுகவை பின்னுக்கு தள்ளி விஜய் முன்னிலை பெற்று இருந்தார். பரபரக்கும் வாக்கு எண்ணிக்கை மற்றும் ஆட்சியைப் பிடிப்பது யார் என்று எதிர்பார்ப்புடன் மக்கள் காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: விஜயுடன் கூட்டணி வைக்கும் நிலை வராது... எதிர்பாராத இடத்தில் இருந்து தவெகவிற்கு வந்த பதிலடி...!