உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாமல் பல கலாச்சாரங்களைச் சேர்ந்த மக்களும் ஆர்வத்துடன் எதிர்நோக்கும் ஒரு மாபெரும் கொண்டாட்டமே கிறிஸ்துமஸ் பண்டிகை. இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூரும் இப்பண்டிகை, ஆண்டுதோறும் டிசம்பர் 25 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
2025 ஆம் ஆண்டில் இது வியாழக்கிழமை அன்று வருகிறது. இந்த ஆண்டும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட கோலாகலமான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையை, தமிழக அரசியல் கட்சிகள் பலவும் சமத்துவக் கோட்பாட்டுடன் இணைத்து விழாவாக நடத்தி வருவது வழக்கம். அந்த வரிசையில், நடிகரும் அரசியல்வாதியுமான விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் இன்று கொண்டாடி வருகிறது.

நிகழ்ச்சியில் கட்சியின் தலைவர் விஜய் கலந்துக் கொண்டார். மாமல்லபுரத்தில் உள்ள ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஹோட்டலில் இந்த சமத்துவக் கிறிஸ்துமஸ் விழாவை வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட விஜய் முக்கியஸ்தர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். தொடர்ந்து பிரார்த்தனை செய்யப்பட்டது. பிறகு கிறிஸ்துமஸ் பாடல்கள் இசைக்கப்பட்டன.
இதையும் படிங்க: பாழும் கிணற்றில் தள்ளினாலும் நாட்டைக் காத்த அரசன்..! கிறிஸ்துமஸ் விழாவில் விஜய் பேருரை…!
இந்த விழாவில் விஜய் பேருரை ஆற்றினார். தொடர்ந்து கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்தவர்களோடு குழந்தைகள் மேடைக்கு வந்து விஜய்க்கு ரோஜா பூக்கள் கொடுத்த மகிழ்ந்தனர். பின்னர் குழந்தைகளோடு சேர்ந்து விஜய் கிறிஸ்துமஸ் விழாவை கேக் வெட்டி கொண்டாடினார். அப்போது குழந்தைகளுக்கு விஜய் கேக் கூட்டி மகிழ்ந்தார். அப்போது குழந்தைகளும் விஜய்க்கு ஆசையாக கேக் ஓட்டி கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
இதையும் படிங்க: அதிமுக - 45%, தவெக - 7%, நாதக - 3%- திமுக தலையில் இடியை இறங்கிய முக்கிய சமூகம்... வெளியானது ஷாக்கிங் சர்வே ரிசல்ட்...!