தமிழகம் முழுவதும் வாக்காளர் சிறப்பு திருத்த பணிகளை கண்டித்து தமிழக வெற்றி கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னை சிவானந்தா சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தின் மாநில செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகி ஒருவர் பேசினார். அவர் பேச பேச தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர். நமக்குள் இந்த சார்க்கும் ஆகாது ராஜா என்ற தெரிவித்தார். குட்டையில் மீன் பிடிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்றும் அடி சேர் கூட கிடைக்காது எனவும் தெரிவித்தார். திருடாதே வாக்கை திருடாதே என பாடல் பாடி தொண்டர்களை ஆரவாரப்படுத்தினார்.

தொடர்ந்து மாபெரும் சபைகளில் நீ நடந்தால் மாலைகள் விழவேண்டும் என்ற பாடல் பாட இதற்கு தகுதியானவர் விஜய் தான் என்று கூறினார். எம்ஜிஆர் படுத்துக் கொண்டே ஓட்டு வாங்கினார் என்றும் விஜய் கண் அசைவிலேயே ஓட்டு வாங்குவார் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 2026-ல் விஜய் தான் முதலமைச்சர்..! செதற விடுவோம்… ஆதவ் அர்ஜுனா திட்டவட்டம்…!
முதலில் வந்த சார் யார் என்றே தெரியாத நிலையில் இப்போது இந்த சார் வந்திருப்பதாக தெரிவித்தார். நாங்கள் எல்லாவற்றுக்கும் தயாராகி விட்டோம் என்றும் யார் இருக்கிறார்கள், யாரு இறந்துவிட்டார்கள், யாரிடம் பெயர்ந்தார்கள் என எல்லாவற்றுக்கும் ரெக்கார்ட் இருப்பதாகவும் ஒன்றும் செய்ய முடியாது எனவும் தெரிவித்தார். ஜலித்து எடுத்து விடுவோம் என்றும் பேசினார். பெண் நிர்வாகியின் பேச்சைக் கேட்டு அங்கிருந்த தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர்.
இதையும் படிங்க: ராகுல் - விஜய் கூட்டணி… முக்கிய தகவல் கொடுத்த தவெக நிர்மல்குமார்…!