தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள செங்கிப்பட்டி அருகே நடைபெற்ற தமிழகத்தில் கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் கட்சியின் தலைவர் விஜய் பச்சைத் துண்டுடன் கலந்து கொண்டார். தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், அந்த கடவுளுக்கே படையல் போடுபவர்கள் நம் விவசாயிகள் என்றும் இந்த பூமியை சாமியாக்குபவர்கள் விவசாயிகள் எனவும் விஜய் தெரிவித்தார்.
அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் ஒரு விவசாய குடும்பத்தில் பிறக்க வேண்டும் என்று ஆசைப்படுவதாகவும் தனக்கு விவசாயத்தைப் பற்றி பெரிய அளவில் தெரியவில்லை என்றாலும் அவர்கள் படும் கஷ்டம் என்னவென்று தனக்கு நன்றாக தெரியும் எனவும் விஜய் தெரிவித்தார். மற்றவர்களைப் போல நானும் டெல்டாக்காரன் தான் என்று காதில் டால்டா ஊற்ற வரவில்லை என்றும் தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்தால் நிச்சயம் விவசாயிகள் பிரச்சனை தீர்க்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மணலையும் கனிம வளங்களையும் கொள்ளை அடிக்கிறார்கள் என்று கூறிய விஜய், மணல் கொள்ளையை அடிப்பதே தி.மு.க தான் என்று திட்டவட்டமாக தெரிவித்தார். மொத்தத்தில் திமுக ஆட்சியில் தமிழ்நாடு திவாலாக போகிறது என்று தெரிவித்துள்ளார். உங்க கிட்ட பேசுவது ஒன்றுதான்., சரி அதை விடுங்கள் என்று கூறிவிட்டார்.
இதையும் படிங்க: ஓம் சக்தி…பராசக்தி… திமுக ஒரு தீய சக்தி..!! தஞ்சையில் விஜய் அனல் தெறிக்கும் பேச்சு..!!
விவசாயிகள் கஷ்டப்பட்டு விளைவித்த நெல்மணிகள் மழை நீரில் வீணாவதாகவும் போராடுபவர்களை குண்டாஸில் போடுகிறார்கள் என்றும் தெரிவித்தார். ஆட்சி முடியும் தருவாயில் எதற்காக திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறீர்கள் என்றும் கேள்வி எழுப்பினார். பரந்தூர் விமான நிலைய பிரச்சனையில் திமுகவின் நிலைப்பாடு என்ன என்று கேள்வி எழுப்பினார். திமுகவை மக்கள் வெறுத்துவிட்டதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: விஜய்க்கு ஒரு எம்எல்ஏ சீட் கூட தேறாது..! அடித்துக் கூறிய விசிக MP ரவிக்குமார்..!!