தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவரும், பிரபல நடிகருமான தளபதி விஜய், இன்று (செப்டம்பர் 27) நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் தனது தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தைத் தொடங்கியுள்ளார். கடந்த செப்டம்பர் 13-ம் தேதி திருச்சியில் தொடங்கிய இந்த மக்கள் சந்திப்பு தொடர் திருச்சி, அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம் போன்ற இடங்களைத் தொட்டு வந்துள்ளது. இன்றைய பயணம், விஜயின் அரசியல் பயணத்தில் முக்கியமான திருப்புமுனையாக அமையும் என தவெக தொண்டர்கள் நம்புகின்றனர்.

கடந்த பிரச்சாரங்களில் அவர், ஊழல், வேலையின்மை, விவசாயிகள் பிரச்சினைகள் போன்றவற்றை எதிர்த்து பேசியது பெரும் கவனத்தை ஈர்த்தது. நாமக்கல் - கரூர் பகுதிகளில் தொழிலாளர்கள், விவசாயிகள் அதிகம் உள்ளதால், இங்கு விஜயின் பேச்சு உள்ளூர் பிரச்சினைகளைத் தொடும் என்பது உறுதி. தவெகவின் இலக்கு, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் மக்களிடம் நேரடியாக சென்று ஆதரவைப் பெறுவது ஆகும்.
இதையும் படிங்க: எனக்கு கூடதான் பெரிய கூட்டம் வந்துச்சு.. விஜய்யை விமர்சித்த சரத்குமார்..!!
நாமக்கல் சாலை ரோடில் உள்ள கே.எஸ். திரையரங்கம் அருகே மக்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பேசிய தவெக தலைவர் விஜய், திமுக பாஜக இடையே மறைமுக கூட்டணி இருப்பதாக கடுமையாக விமர்சித்தார். மேலும் 2026 தேர்தலில் தவெகவுக்கும் கொள்கை என்ற பெயரில் தமிழகத்தை கொள்ளை அடிக்கும் திமுகவுக்கும் இடையே தான் போட்டி என திட்டவட்டமாக கூறிய விஜய், மோசமான ஆட்சி நடத்தும் திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டுமா என தொண்டர்களை நோக்கி கேள்வி எழுப்பினார். பாஜகவுடன் கூட்டணி தேவையா என எம்ஜிஆரின் தொண்டர்கள் கேட்கின்றனர், திமுகவுக்கு போடும் ஓட்டு பாஜகவிற்கு போடுவது, திமுகவை போல் பொய்யான வாக்குறுதியை தரமாட்டோம், வரும் தேர்தலில் ஒரு கை பார்த்துவிடலாம் என விஜய்அடித்துக்கூறினார்.

சாலை, குடிநீர், மருத்துவம், பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்ற ஒரே விஷயத்தை தான் மக்கள் தொடர்ந்து நம்மிடம் சொல்கிறார்கள். திமுக ஆட்சி மக்களின் அடிப்படை வசதிகளை கூட செய்து தரவில்லை. தவெக ஆட்சி அமைந்த உடன் அடிப்படை சாலை வசதி, குடிநீர், மருத்துவம், பெண்கள் பாதுகாப்பு என அனைத்தும் செய்து தரப்படும் என வாக்குறித்து அளித்தார்.
மேலும் புதிதாக பேசு என்கிறார்கள்... புதிதாக என்ன சொல்வது செவ்வாய் கிரகத்தில் ஐ.டி கம்பெனி கட்டப்படும், வீட்டிற்குள்ளேயே ஏரோபிளேன் ஓட்டப்படும், அமெரிக்காவுக்கு ஒத்தையடி பாதை அமைக்கப்படும் என முதல்வர் சொல்வது போல பொய்யான வாக்குறுதிகளை அடித்து விடுவோமா என தொண்டர்களை நோக்கி விஜய் ஆவேசமாக பேசினார்.
இதையும் படிங்க: அறிவு தீபம் ஏற்றும் ஆசிரியர்களுக்கு என் வாழ்த்துக்கள்.. தவெக தலைவர் விஜய் உருக்கம்..!!