கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் திமுக தலைமையிலான மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் திட்டக்குடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சி.வெ. கணேசன் ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது: திமுக கூட்டணி தலைமையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திட்டக்குடி தொகுதி வேட்பாளர் சி.வெ. கணேசன் 2021 சட்டமன்ற தேர்தலில் 22,000 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் நீங்கள் வெற்றி பெற வைத்தீர்கள் அதற்கு முதல்வர் அவர்கள் அவரை அமைச்சராக்கினார் அதேபோல் நீங்கள் தற்போது நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலில் ஐம்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அவரை வெற்றி பெற செய்ய வைக்க வேண்டும் மீண்டும் அவரை அமைச்சராக்குவோம்.
கணேஷன் அவர்கள் உங்களுக்கு நன்றாக தெரியும் மக்கள் பணியில் நீண்ட அனுபவம் பெற்றவர் கணேசன் அவர்கள் திட்டக்குடி தொகுதியை அவர் உயிருக்கு நிகராக நேசிப்பவர். 2021 தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் அவர்கள் திட்டக்குடி பேராசை நகர செயலாளர் மாற்றவும் என்று கூறினார். அதேபோல் வெற்றி பெற்ற பிறகு திட்டக்குடி பேராசை நகராட்சியாக மாற்றி உள்ளோம் அதற்கு நான்கு கோடி ரூபாய் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. திட்டக்குடி பேருந்து நிலையம் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. கோயில்கள் குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளது. நீண்ட கால விவசாயம் கோரிக்கையான பெலிங்டன் ஏரி 130 கோடி ரூபாய் மதிப்பில் கறைகளை வலுப்படுத்தப்பட்டு வருகிறது. கிராமத்தில் மாட்டு தீவனம் கருவேப்பிலை இருந்து தொழுதூர் வரை 140 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நான்கு வழி சாலை திட்டக்குடி பகுதியில் பல்வேறு பாலங்கள் கட்டப்பட்டுள்ளன உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மீண்டும் அவருக்கு வாய்ப்பு கொடுத்து அவரை வெற்றி பெற செய்ய செய்ய வேண்டும் இந்த தொகுதிக்காக இன்னும் பல திட்டங்களை செய்வார்.
இதையும் படிங்க: “பாதம் தாங்கி பழனிசாமி இனி பால்டாயில் பழனிசாமி”... இபிஎஸ் சொன்ன வார்த்தையை வைத்து திருப்பி அடித்த உதயநிதி...!
இந்தத் தேர்தல் டெல்லி அணிக்கும் தமிழ்நாடு அணிக்கும் நடைபெறும் முக்கியமான தேர்தல் டெல்லிக்கு மோடி, தமிழ்நாட்டில் அணிக்கு நம்ம முதல்வர். பாஜக அரசு தமிழ்நாட்டுக்கு எந்த ஒரு நிதியும் ஒதுக்க மறுக்கின்றனர் நம்ம கேட்பது எதுவும் கொடுக்கவில்லை. நமது உரிமையை கொடுப்பதில்லை. தமிழ்நாட்டை புறக்கணிக்கின்ற பாஜகவை நாம் இந்த தேர்தலில் புறக்கணித்து காட்ட வேண்டும்.
எடப்பாடி பழனிச்சாமி மோடியின் அடிமையாக இருக்காதீர்கள். அதுவும் முரட்டு அடிமையாக நீங்கள் இருக்காதீர்கள். இதை கூறியவுடன் எடப்பாடி என் மீது பகிரமாக பேசி வருகிறார். உதயநிதிக்கு எந்த அனுபவமும் இல்லை என்று கூறினார் எனக்கு அனுபவம் கிடையாது. இந்த அனுபவம் எனக்கு கிடையாது. எடப்பாடி பழனிச்சாமி சசிகலாவின் காலில் விழுந்த போட்டோவை எடுத்துக் காட்டினார். பதவிக்காக பொறுப்புக்காக ஒருவர் காலில் விழுந்த அனுபவம் எனக்கு கிடையாது. சங்கி கூட்டத்திற்கு அடிமையாக இருக்கக்கூடிய அனுபவம் எனக்கு கிடையாது.
இந்த போட்டோவை நான் விருப்பப்பட்டு உங்களிடம் காட்ட வில்லை, நீங்கள் கேட்டதால் தான் நான் காட்டுகிறேன். காலில் விழுந்தது தப்பு இல்லை காலில் விழுந்து முதலமைச்சர் ஆகி அந்த அம்மா காலை வாரிவிட்டது தான் தப்பு. நாய்க்கு நாலு பிஸ்கேட் போட்டால் கூட நாய் வாலாட்டி நம்ம கூட தான் இருக்கும் என்று சசிகலா கூறுகிறார்கள் . இந்த பிரச்சனை அவங்களாச்சி அந்த அம்மாவாச்சி நமக்கு ஏதும் வேண்டாம்.
இந்த சட்டமன்றத் தேர்தல் மிக முக்கியமானது. ஒன்றிய பாஜக அரசே இந்தியாவில் அனைத்து மாநிலத்தையும் தனது கண்ட்ரோலில் வைத்துள்ளது. ஆனால் தமிழ்நாட்டின் உள்ளே நுழைய முடியவில்லை அதற்கு நாம் தான் காரணம். தமிழ்நாடு என்றைக்கும் சுயமரியாதை உள்ள மண்ணு . அதனால் தான் ஒவ்வொரு தேர்தலில் எடப்பாடி பழனிசாமிக்கும் அவரது கூட்டணிக்கும் அடிமேல் அடி தோல்வியை கொடுத்துள்ளோம். ஏற்கனவே 10 தோல்வி பழனிச்சாமியாக ஆக்கிவிட்டோம். இந்த முறை இன்னொரு தோல்வியை கொடுத்து மொத்த தோல்வி பழனிச்சாமியாக ஆக்கி அவரை வீட்டுக்கு அனுப்புவோம் என்றார்.
இதையும் படிங்க: என்னம்மா இப்படி ஒரு குண்டைத் தூக்கிப் போடுற... ராக் பண்றீங்களா? -பிரசாரத்தில் உதயநிதி ஸ்டாலின் கலகல...!!