சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் தமிழ்நாடு துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தீவிரமான தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தத் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் உதயநிதி ஸ்டாலின், நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். சென்னையின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்தத் தொகுதி, திமுகவின் பாரம்பரிய கோட்டையாகக் கருதப்படுகிறது.
கலைஞர் கருணாநிதியின் சாதனைகளை முன்னிறுத்தி, மக்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில் அவரது பரப்புரை நடைபெற்று வருகிறது.வேட்புமனு தாக்கல் நாளில் உதயநிதி ஸ்டாலின் பெரும் தொண்டர் புடைசூழலுடன் சாலை முழுவதும் ஊர்வலம் நடத்தினார். ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் தெருக்களில் அணிவகுத்து நின்று உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

பெசன்ட் சாலையில் உள்ள தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்திற்கு அவர் சென்றபோது, மக்கள் கூட்டம் பெரும் ஆரவாரத்துடன் வரவேற்றது. 2021 தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்டு பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற உதயநிதி, இம்முறையும் அதே இடத்தைத் தேர்ந்தெடுத்து தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக களமிறங்கியுள்ளார்.
இதையும் படிங்க: #BREAKING: அதிரும் சேப்பாக்கம் தொகுதி..! துணை முதல்வர் உதயநிதி வேட்பு மனுத் தாக்கல்..!!
உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். நேற்று வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில், இன்று பிரச்சாரத்தை தொடங்கினார். உதயநிதி ஸ்டாலின், தான் போட்டியிடும் சேப்பாக்கம்–திருவல்லிக்கேணி தொகுதியில் பிரசாரத்தை தொடங்குவதற்கு முன், அருகில் உள்ள செங்கேணி அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டார். தொடர்ந்து 116 வட்டத்தில் தனது பரப்புரையை நடத்தினார். ஒவ்வொரு வீடாகச் சென்று உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து தன்னை வெற்றி பெற வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: பாஜகவின் "முரட்டு அடிமை" EPS..! தி.மலையில் எ.வ.வேலுவை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பரப்புரை..!!