• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, April 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    காங்., தலைவர் படுகொலை வழக்கு! 23 ஆண்டுகளுக்கு பின் வெளியான தீர்ப்பு! மாஜி முதல்வர் மகன் கைது!

    சத்தீஸ்கரில், 2003ல் நடந்த தேசியவாத காங்., தலைவர் ராமவதார் ஜக்கி படுகொலை வழக்கில், அம்மாநில முன்னாள் முதல்வர் அஜித் ஜோகியின் மகன் அமித் ஜோகியை, சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் நேற்று குற்றவாளி என அறிவித்தது.
    Author By Pandian Fri, 03 Apr 2026 16:12:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Amit Jogi Convicted in 2003 Ramavatar Jaggi Murder Case by Chhattisgarh High Court

    சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் அஜித் ஜோகியின் மகன் அமித் ஜோகி, 2003ல் நடந்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் ராமவதார் ஜக்கி படுகொலை வழக்கில் குற்றவாளி என சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது. மூன்று வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    2000ஆம் ஆண்டு மத்திய பிரதேசத்திலிருந்து சத்தீஸ்கர் தனி மாநிலமாகப் பிரிக்கப்பட்டது. அதன் பிறகு 2000 முதல் 2003 டிசம்பர் வரை காங்கிரஸ் சார்பில் அம்மாநிலத்தின் முதல் முதல்வராக அஜித் ஜோகி பதவி வகித்தார். பின்னர் காங்கிரஸிலிருந்து விலகி 2016ல் ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர் என்ற தனிக்கட்சியைத் தொடங்கினார்.

    அஜித் ஜோகி முதல்வராக இருந்த காலத்தில், 2003 ஜூன் 4ஆம் தேதி ராய்பூரில் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் ராமவதார் ஜக்கி துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது வி.சி. சுக்லாவுக்கு நெருக்கமானவராகக் கருதப்பட்ட ஜக்கியின் படுகொலை அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதையும் படிங்க: டிஸ்சார்ஜ்!! சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் காங்., மூத்த தலைவர் சோனியா காந்தி!!

    AjitJogi

    முதலில் மாநில போலீசார் விசாரணை நடத்தினர். 2003 டிசம்பரில் காங்கிரஸ் தோல்வியடைந்து பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, 2004 ஜனவரியில் வழக்கு சி.பி.ஐ. வசம் மாற்றப்பட்டது. சி.பி.ஐ. விசாரணையில் அமித் ஜோகிக்கு கொலையில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 29 பேர் மீது ராய்பூர் விசாரணை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

    2007 மே 31ஆம் தேதி விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்தபோது, 28 பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதாகவும், அமித் ஜோகி மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி அவரை விடுதலை செய்தது. இதை எதிர்த்து சி.பி.ஐ. உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. ஆனால் தாமதம் காரணமாக 2011ல் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. சத்தீஸ்கர் மாநில அரசு மற்றும் கொலை செய்யப்பட்ட ஜக்கியின் மகன் சதீஷ் ஜக்கி தாக்கல் செய்த மேல் முறையீடுகளும் தள்ளுபடி செய்யப்பட்டன.

    இந்த நிலையில் சி.பி.ஐ. உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. உச்ச நீதிமன்றம், அமித் ஜோகியின் விடுதலையை எதிர்த்து புதிய மேல் முறையீடு செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் கடந்த மாதம் முதல் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

    நேற்று சத்தீஸ்கர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரமேஷ் சின்ஹா மற்றும் நீதிபதி அர்விந்த் குமார் அமர்வு, விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து அமித் ஜோகியை குற்றவாளி என அறிவித்தது. மூன்று வாரங்களுக்குள் அவர் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு சத்தீஸ்கர் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: என்ன விஜய்?!! இப்படிப்பண்ணா எப்படி? பெரம்பூரில் பூட்டிக் கிடக்கும் தவெக அலுவலகம்!!

    மேலும் படிங்க
    ஹார்முஸ் ஜலசந்தி கடக்கும் இந்திய கப்பல்கள்!! கடற்படை பாதுகாப்பு வழங்கும்!!  ராஜ்நாத் சிங் உறுதி!

    ஹார்முஸ் ஜலசந்தி கடக்கும் இந்திய கப்பல்கள்!! கடற்படை பாதுகாப்பு வழங்கும்!! ராஜ்நாத் சிங் உறுதி!

    இந்தியா
    மும்மொழி கொள்கை கட்டாயம்..! பணிகளை தீவிரப்படுத்திய CBSE ..!!

    மும்மொழி கொள்கை கட்டாயம்..! பணிகளை தீவிரப்படுத்திய CBSE ..!!

    இந்தியா
    ஒரே நாளில் புதுச்சேரி செல்லும் மு.க.ஸ்டாலின் - ராகுல்காந்தி!! ஒரே மேடையில் பிரசாரம் சாத்தியமா?!

    ஒரே நாளில் புதுச்சேரி செல்லும் மு.க.ஸ்டாலின் - ராகுல்காந்தி!! ஒரே மேடையில் பிரசாரம் சாத்தியமா?!

    அரசியல்
    புதுச்சேரியில் மோடி மேஜிக்! அஜந்தா சிக்னலில் இருந்து அண்ணா சிலை வரை பிரதமர் பிரம்மாண்ட ரோடுஷோ!

    புதுச்சேரியில் மோடி மேஜிக்! அஜந்தா சிக்னலில் இருந்து அண்ணா சிலை வரை பிரதமர் பிரம்மாண்ட ரோடுஷோ!

    இந்தியா
    மெயின் ஸ்க்ரீனுக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மருகமன்!! நண்பனுக்காக களத்தில் குதித்தார் சபரீசன்!!

    மெயின் ஸ்க்ரீனுக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மருகமன்!! நண்பனுக்காக களத்தில் குதித்தார் சபரீசன்!!

    அரசியல்
    வாய்ப்பு கிடைக்கலன்னா வருத்தப்படாதீங்க..! உள்ளாட்சித் தேர்தல் இருக்கு..! முதல்வர் ஸ்டாலின் உறுதி..!!

    வாய்ப்பு கிடைக்கலன்னா வருத்தப்படாதீங்க..! உள்ளாட்சித் தேர்தல் இருக்கு..! முதல்வர் ஸ்டாலின் உறுதி..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஹார்முஸ் ஜலசந்தி கடக்கும் இந்திய கப்பல்கள்!! கடற்படை பாதுகாப்பு வழங்கும்!!  ராஜ்நாத் சிங் உறுதி!

    ஹார்முஸ் ஜலசந்தி கடக்கும் இந்திய கப்பல்கள்!! கடற்படை பாதுகாப்பு வழங்கும்!! ராஜ்நாத் சிங் உறுதி!

    இந்தியா
    மும்மொழி கொள்கை கட்டாயம்..! பணிகளை தீவிரப்படுத்திய CBSE ..!!

    மும்மொழி கொள்கை கட்டாயம்..! பணிகளை தீவிரப்படுத்திய CBSE ..!!

    இந்தியா
    ஒரே நாளில் புதுச்சேரி செல்லும் மு.க.ஸ்டாலின் - ராகுல்காந்தி!! ஒரே மேடையில் பிரசாரம் சாத்தியமா?!

    ஒரே நாளில் புதுச்சேரி செல்லும் மு.க.ஸ்டாலின் - ராகுல்காந்தி!! ஒரே மேடையில் பிரசாரம் சாத்தியமா?!

    அரசியல்
    மெயின் ஸ்க்ரீனுக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மருகமன்!! நண்பனுக்காக களத்தில் குதித்தார் சபரீசன்!!

    மெயின் ஸ்க்ரீனுக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மருகமன்!! நண்பனுக்காக களத்தில் குதித்தார் சபரீசன்!!

    அரசியல்
    வாய்ப்பு கிடைக்கலன்னா வருத்தப்படாதீங்க..! உள்ளாட்சித் தேர்தல் இருக்கு..! முதல்வர் ஸ்டாலின் உறுதி..!!

    வாய்ப்பு கிடைக்கலன்னா வருத்தப்படாதீங்க..! உள்ளாட்சித் தேர்தல் இருக்கு..! முதல்வர் ஸ்டாலின் உறுதி..!!

    தமிழ்நாடு
    “ஏய் கொடிய கழட்டு...”... ராமதாஸ் ஆதரவாளரை மிரட்டிய அன்புமணி ஆதரவாளர்கள்..!!

    “ஏய் கொடிய கழட்டு...”... ராமதாஸ் ஆதரவாளரை மிரட்டிய அன்புமணி ஆதரவாளர்கள்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share