இப்போதெல்லாம் பள்ளி, கல்லூரி மாணவர்கள் சின்ன, சின்ன காரணங்களுக்காக தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அடுத்தடுத்து வெளியாகி அதிர்ச்சியூட்டி வருகின்றன. தேர்வுகளில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்தால், தந்தை திட்டியனால், அம்மா போன் வாங்க விடவில்லை என்றும், விசா கிடைக்கவில்லை என்றும், சமூக ஊடகங்களில் அவர்கள் பதிவிடும் பதிவுகளுக்கு லைக்குகள் வரவில்லை போன்ற சின்ன, சின்ன சம்பவங்களுக்காக தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
ஒரு நொடியில் அவசரப்பட்டு, கொஞ்சம் கூட யோசிக்காமல் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள். சமீபத்தில், இதேபோன்று ஒரு பெண்ணும் தனது உயிரை மாய்த்துக் கொண்டார். ஆங்கிலம் பேசத் தெரியாததால் அவர் தற்கொலை செய்து கொண்டார். கர்னூல் மாவட்டத்தில் நடந்த இந்த சம்பவம், இளைஞர்களிடையே அதிகரித்து வரும் தற்கொலைகள் குறித்து கவலையை எழுப்புகிறது.
கர்னூலுக்கு அருகிலுள்ள தண்டரபாடுவில் உள்ள மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி மையத்தில் பயின்று வந்த 17 வயது சிறுமி, தனக்கு சரளமாக ஆங்கிலம் பேச வரவில்லை என பெற்றோரிடம் அடிக்கடி கூறி வந்துள்ளார். பெண்ணின் இந்த புலம்பலைக் காதில் கூட வாங்காத பெற்றோர் தொடர்ந்து அங்கேயே படிக்க கட்டாயப்படுத்தி வந்துள்ளனர். ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமையிழந்த சிறுமி, அவரது பெற்றோரிடம் “ஆங்கிலம் கற்றுக்கொள்வதை விட சாவதே மேல்” என வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த சிறுமி, நேற்று கல்லூரி அறையில் நண்பர்கள் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதையும் படிங்க: #BREAKING அதிகாலையிலேயே ஷாக்... நீதிமன்ற வாசலிலேயே காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை...!
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 194-ன் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவியின் நண்பர்கள், ஆங்கிலம் கற்றுக்கொள்வது மற்றும் மாதவிடாய் தொடர்பாகவும் சிக்கல்களை எதிர்கொண்டதாகக் கூறினர். இதன் காரணமாக மன அழுத்தத்தில் இருந்த சிறுமி தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது.
மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் விஷயத்தில் பெற்றோர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர் . பல சந்தர்ப்பங்களில், டீனேஜ் குழந்தைகள் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பற்றி பெற்றோரிடம் சொல்ல தயங்குகிறார்கள். இருப்பினும், சமீபத்திய சம்பவத்தில், சிறுமி தனது பிரச்சினையை தனது பெற்றோரிடம் விளக்கினார். இருப்பினும், அவர்கள் அவளை சமாதானப்படுத்தி கல்லூரிக்கு திருப்பி அனுப்பியது கவலையளிக்கிறது. ஆங்கில மொழியின் மீதான பயத்தைப் போக்க ஆலோசனை தேவை எனக்கூறுகின்றனர்.
இதையும் படிங்க: பாளையங்கோட்டையில் பகீர் சம்பவம்... போக்சோ கைதி லுங்கியில் தூக்கிட்டு தற்கொலை ...!