உயர்நீதி மன்ற மதுரைக்கிளை வளாகத்தில் சிறப்பு காவல்படை காவலர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை உயர்நீதிமன்ற கிளை வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு காவல் படை காவலர் மகாலிங்கம் என்பவர் தற்கொலை செய்து கொண்டார். மதுரை மாவட்டம் ஏழுமலை கோட்டைப்பட்டியை சேர்ந்த மகாலிங்கம் என்பவர் சிறப்பு காவல் படை காவலராக 2023ம் ஆண்டு முதல் பணியாற்றி வந்தார். இவர் நேற்று இரவு முதல் முறையாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அதிகாலை சுமார் மூன்று மணி அளவில் பாதுகாப்பு பணிக்காக வைத்திருந்தார் துப்பாக்கியை எடுத்து மகாலிங்கம் தன்னை தானே சுட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. துப்பாக்கி சத்தம் கேட்டு ஓடி வந்த நீதிமன்ற வளாகத்தில் இருந்த காவலர்கள், மகாலிங்கத்தில் உடனடியாக ஆம்புலன்ஸ் போன மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மகாலிங்கத்தை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: பாளையங்கோட்டையில் பகீர் சம்பவம்... போக்சோ கைதி லுங்கியில் தூக்கிட்டு தற்கொலை ...!
மகாலிங்கம் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட இடத்தில் தற்கொலை கடிதம் ஒன்று சிக்கி இருப்பதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. அந்த தற்கொலை கடிதத்தில் எனது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என எழுதப்பட்டுள்ளது. இதை எடுத்து அந்த தற்கொலை கடிதத்தை கைப்பற்றிய போலீசார் மகாலிங்கத்தின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: என் சாவுக்கு காரணம்... மன உளைச்சலில் அரசு அதிகாரி எடுத்த விபரீத முடிவு... பரபரப்பு...!