அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவிக்கு வந்த பின் அமெரிக்க பொருளாதாரம் கடந்த 3 ஆண்டுகளில் முதல் முறையாக சரிந்துள்ளது. அமெரிக்கப் பொருளாதாரம் ஜனவரி முதல் மார்ச் வரையிலான முதல் காலாண்டில் 0.3 சதவீதம் சரிந்துள்ளது. அமெரிக்க அதிபராக ட்ரம்ப் வந்தபின் அதிகமான வரிகளை விதித்ததால், நிறுவனங்கள் இறக்குமதி அதிகரித்தது. இதனால் பொருளாதார வளர்ச்சி வேகம் குறைந்துள்ளது.

2024ம் ஆண்டில் கடைசி 3 மாதங்களில் 2.4 சதவீதம் வளர்ந்திருந்த பொருளாதாரம் அதைவிட 0.3 சதவீதம் குறைந்துள்ளது. முதல் காலாண்டில் இறக்குமதி அதிகரித்ததால் 0.5 சதவீத புள்ளிகள் குறைந்தது, அதோடு நுகர்வோர்கள் செலவு செய்யும் தொகையும் வெகுவாகக் குறைந்து, அரசின் செலவும் 5.1 சதவீதமாகக் குறைந்துவிட்டது.
இதையும் படிங்க: டிரம்ப் மீது பரபரப்பு குற்றச்சாட்டு.. ஓபன் ஸ்டேட்மெண்ட் கொடுத்த இந்திய வம்சாவளி எம்.பி!!
ஆனால், வர்த்தகத்துக்கான முதலீடு 21.9 சதவீதம் அதிகரித்துள்ளது, நிறுவனங்கள் புதிய எந்திரங்கள் வாங்குவதற்கு முதலீடு செய்துள்ளனர். நாட்டின் பொருளாதாரத்தை அளவிடக்கூடிய உள்நாட்டு மொத்த உற்பத்தி 2024 கடைசி காலாண்டில் 2.90 சதவீதமாக இருந்தநிலையில் 2025 ஜனவரி மார்ச் காலாண்டில் 3 சதவீதமாக அதிகரித்துள்ளது.

அமெரிக்கப் பொருளாதாரம் முதல் காலாண்டில் சரிந்தவுடன், அந்நாட்டின் பங்குச்சந்தையில் வர்த்தப் புள்ளிகள் சரிந்து வீழ்ச்சி அடைந்தது. டோவ் ப்யூச்சர்ஸ் 350 புள்ளிகளும், நாஷ்டாக் 100 புள்ளிகளும் சரிந்தன. அதிபர் ட்ரம்ப் 2வது முறையாக அமெரிக்க அதிபராக வந்தபின் வர்த்தகப் பற்றாக்குறையை குறைக்கும் நோக்கில், அதிக வரிவிதிக்கும் நாடுகளுக்கு அதே வரிவிதிப்பை விதிக்கும் பரஸ்பர வரிவிதிக்கும் முறையைக் கொண்டு வந்தார்.

அது மட்டுமல்லாமல் சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 145 சதவீதம் வரிவிதித்தார். இதனால் வரிவிதிப்புக்கு அஞ்சி நிறுவனங்கள் அதிகமாக வெளிநாட்டிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்யதன. இறக்குமதி அதிகரித்ததன் காரணமாக பொருளாதார வளர்ச்சி குறைந்தது. அதிபர் ட்ரம்ப் வரிவிதிப்பால் வரும் 2வது காலாண்டில் இறக்குமதி குறையும் இதன் காரணமாக பொருளாதார வளர்ச்சி வேகமெடுக்கும் என பொருளாதார வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.
இதையும் படிங்க: கட்டம் கட்டி அடிக்கும் டிரம்ப்... கெஞ்சி கதறும் சீனா!!