குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு தமிழகத்தைச் சேர்ந்த மூத்த பாஜக தலைவரும், தற்போது மகாராஷ்டிர ஆளுநராக இருக்கும் சி.பி. ராதாகிருஷ்ணன் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜகதீப் தன்கர், உடல்நலக் காரணங்களைக் காட்டி தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 9 அன்று நடைபெறவுள்ள குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கு சி.பி. ராதாகிருஷ்ணனை பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி தனது வேட்பாளராக அறிவித்துள்ளது.
சி.பி. ராதாகிருஷ்ணன் 1957 ஆம் ஆண்டு அக்டோபர் 20 அன்று தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில் பிறந்தவர். இவரது அரசியல் பயணம் மிக நீண்டதும், பல்வேறு பொறுப்புகளை உள்ளடக்கியது. இந்த நிலையில், தமிழ்நாட்டை சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணன் துணை குடியரசு தலைவர் ஆகுவதில் மகிழ்ச்சி என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார். துணை குடியரசு தலைவராக பொறுப்பேற்றாலும் பின்னாளில் குடியரசு தலைவர் ஆகுவதற்கும் வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தார்.

கொங்கு மண்டலத்தின் பிரதிநிதியாக இருந்து செயல்பட்டவர் துணை குடியரசு தலைவராக பொறுப்பேற்பதற்கு மதிமுக சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக வைகோ கூறினார். வீரமும் விருந்தோம்பலும் நிறைந்த கொங்கு மண்டலத்தின் பிரதிநிதி சி.பி ராதாகிருஷ்ணன் என்று கூறினார்.
இதையும் படிங்க: கொலை செய்ய நெனைச்சாலே குலை நடுங்கணும்... சிறப்பு சட்டம் கொண்டுவர வைகோ வலியுறுத்தல்!
இதையும் படிங்க: அவரை பத்தி பேசுறதே வேஸ்ட்! மல்லை சத்யாவை ரோஸ்ட் செய்த துரை வைகோ