கோவையில் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் செய்தியாளார்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது : ஒவ்வொரு தொகுதியிலும் தேர்தல் பணியாற்றியவர்களுக்கு வலி இருக்கும், எனக்கும் அந்ந்த வலி இருந்துள்ளது. நானும் அதையும் தாண்டி வந்துள்ளேன். 5 ஆண்டுகள் ஒரு தொகுதியில் பணியாற்றுகிறோம், கூட்டணியில் தொகுதி கிடைக்கவில்லை என்றால் எவ்வளவு வருத்தம் இருக்கும் என்பது தெரியும். ஆனால் கூட்டணி என்ற போது நாம் நினைக்கும் தொகுதி கிடைக்காமல் போகலாம் அவர்கள் எதிர்பார்த்த தொகுதி அவர்களுக்கு கிடைக்காமல் போகலாம். இது கலந்தது தான் கூட்டணி. கட்சியின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும் மன கஷ்டத்தை வெளிப்படுத்தும் விதமாக இம்மாதியான சம்பவம் பாஜக கட்சிக்குள் நடப்பது மிகுந்த வருத்தத்திற்கு உரியது.
அனைத்து லெவலில் பேச இக்கட்சியில் நிர்வாக கட்டமைப்பு உள்ளது. கோவையில் 2016 ல் பாஜக எந்த தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. ஆனால் வாக்குசதவிதம் வாங்கியிருந்தோம். அனைத்து தொகுதியிலும் 10 சதவீதம், தெற்கு தொகுதியில் 22 சதவீதம் வாக்குகளை பெற்றோம். 2021 ல் சிட்டிங் சட்டமன்ற உறுப்பினர் எங்களுக்காக விட்டுக்கொடுத்தனர். இன்று 2024 ல் அதிகளவு வாக்குகளை பெற்ற கட்சியினர் கடுமையாக உழைத்த தொகுதிகள் எங்களிடம் இல்லை கூட்டணி கட்சியிடம் உள்ளது. அதனால் கட்சி தலைமை என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பார்கள்.
அண்ணாமலை டெல்லிக்கு கடிதம் அனுப்பியது குறித்து எனக்கு தெரியாது. கட்சி தலைமை யாருக்கு வாய்ப்பு வழங்கினாலும் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும். பாஜக போட்டியிடும் இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்பது தான் நோக்கம். தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதே எங்கள் இலக்கு. யார் வேட்பாளர் என்பது முக்கியம் அல்ல.
இதையும் படிங்க: குறைக்கப்பட்டது பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி..!! பிரதமர் மோடிக்கு அண்ணாமலை நன்றி..!!
கோவை தெற்கு தொகுதி மக்கள் எனக்கு வாழ்க்கையில் சிறப்பான அரசியல் தளத்தை கொடுத்தவர்கள் வரலாற்று வெற்றியையும் கொடுத்தவர்கள். 10 ஆண்டுகளாக தொகுதியில் கடுமையாக பணியாற்றியவள். எந்த தேர்தலாக இருந்தாலும் கட்சி கொடுக்கும் பணிகளை கொடுத்தாலும் செய்வோம், கட்சி யாரை வேட்பாளாராக அறிவித்தாலும் ஒரு சதவீதம் கூட குறையாமல் பணியாற்றுவேன். அண்ணாமலை போட்டியிட வேண்டும் என எனது விருப்பத்தை கூறினேன். விட்டுக்கொடுப்பீர்களா என்ற கேள்விக்கு உங்கள் கற்பனை சிறகுகளை கட்டிக்கொண்டே இருங்கள் என்றார்.
பாஜக வேட்பாளர் பட்டியலில் வேட்பாளார்களை பரிசீலனை செய்யும் தேதிகள் இன்னும அறிவிக்கவில்லை. தேசிய கட்சி என்பதால் சில முறைகள் உள்லது மாநில கமிட்டி ஒவ்வொரு தொகுதிக்கு 3 வேட்பாளார்கள் பெயரை அனுப்ப வெண்டும். டெல்லியில் உள்ள மத்திய தேர்தல் குழு பரிசீலனை செய்து வேட்பாளார்களா அறிவிப்பார்கள் ஓருரி நாட்களில் அந்த பணிகள் நடந்துவிடும் என்றார்.
இதையும் படிங்க: அண்ணா பல்கலை.யில் மீண்டும் ஓர் அதிர்ச்சி... பேராசிரியரால் மாணவிக்கு பாலியல் தொல்லை..! கொந்தளித்த அண்ணாமலை..!!