சென்னையை அடுத்த கோவளத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் 31-வது தென்மாநில முதல்வர்கள் மாநாடு இன்று (ஆகஸ்ட் 19) தொடங்கி நாளை வரை இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெறும் இந்த உயர்மட்ட கூட்டம், மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் வழக்கமான நிகழ்வாக இருந்தாலும், 2022-க்குப் பிறகு நான்கு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடைபெறுவதால் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் விஜய், கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார், கேரள முதல்வர் வி.டி. சதீசன், தெலங்கானா முதல்வர் ஏ. ரேவந்த் ரெட்டி, ஆந்திர முதல்வர் என். சந்திரபாபு நாயுடு ஆகியோர் பங்கேற்க உள்ளனர். அந்தந்த மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள், உள்துறைச் செயலாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் கலந்துகொள்கிறார்கள்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைப் பொறுத்தவரை, முதல்வர் என். ரங்கசாமி பங்கேற்கவில்லை. அதற்குப் பதிலாக துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் கலந்துகொள்வதாக கவர்னர் மாளிகை தெரிவித்துள்ளது. மாநிலங்களுக்கிடையேயான ஒத்துழைப்பு, பொருளாதார வளர்ச்சி, தொழில் முதலீடுகள், கட்டமைப்பு மேம்பாடு, நீர்வளப் பகிர்வு, கல்வி, சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம், பேரிடர் மேலாண்மை, குற்றத் தடுப்பு மற்றும் எல்லைப் பிரச்சினைகள் போன்ற பல முக்கிய விவகாரங்கள் இதில் விவாதிக்கப்படும்.
இதையும் படிங்க: கையில் துப்பாக்கி, ரத்தக்கரை.. விஜய் கைகாட்டிப் பேசிய அதே ஸ்டைலில் அம்மன்..!! பரபரப்பு கட்டவுட்..!!

குறிப்பாக காவிரி நீர் பங்கீடு தொடர்பாக தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் இடையே தொடரும் முரண்பாடுகள் காரணமாக இந்த கூட்டம் அதிக கவனம் பெற்றுள்ளது. தென் இந்திய மாநிலங்களின் கூட்டு நலன் மற்றும் மத்திய-மாநில ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் தளமாக இது பார்க்கப்படுகிறது.
அமித் ஷா இன்று மாலை 4.50 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு, இரவு 7.40 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார். அங்கு உயர் அதிகாரிகளும் கட்சியினரும் வரவேற்க, பின்னர் கோவளம் செல்கிறார். இரவு 9 முதல் 9.30 மணி வரை ஆய்வுக் கூட்டம் நடைபெறும். அ
தில் முதல்வர்கள் பங்கேற்க, அமித் ஷாவுடன் இரவு விருந்தும் உண்டு. நாளை காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை முழுமையான மாநாடு நடைபெறும். தென்மாநிலங்களின் பொதுவான வளர்ச்சிக்கான ஒருங்கிணைந்த நடவடிக்கைகளுக்கு இந்த கூட்டம் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அமித்ஷா விழாவில் பரபரப்பு... அணிவகுப்பின்போது பெண் காவலர்கள் உட்பட 10 பேர் மயக்கம்!