திமுக இன்று வெளியிட்டுள்ள 525 வாக்குறுதிகள் கொண்ட தேர்தல் அறிக்கையை, கவர்ச்சிகரமான பொய்கள் என்று பாஜக தேசிய மகளிர் அணித் தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ அவர்கள் மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக (DMK) என்ற பெயருக்குப் புதிய விளக்கத்தை அளித்து விமர்சித்தார்.
ஏற்கனவே திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியைக் கடுமையாக விமர்சித்திருந்த நிலையில், தற்போது தேர்தல் அறிக்கை குறித்தும் தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.
திமுக அரசு மீண்டும் கவர்ச்சிகரமான, பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசி மக்களை ஏமாற்ற நினைக்கிறது. இல்லத்தரசி கூப்பன், இலவசங்கள் என அறிவித்துள்ள திமுக, இன்று 'டிபார்ட்மெண்டல் கட்சி' (Departmental Katchi - DMK) ஆக மாறியிருக்கிறது என்று அவர் நக்கலாகக் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: இந்த முறை சூப்பர் ஸ்டார்! 525 வாக்குறுதிகளுடன் திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

கடந்த காலங்களில் கொடுத்த வாக்குறுதிகளையே நிறைவேற்றாத நிலையில், தற்போது மீண்டும் இலவசங்களை முன்வைத்து வாக்குகளைப் பெறத் திமுக துடிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
திமுக-விற்கு இனி கனவிலும் கூடத் தமிழக மக்கள் இடம் கொடுக்க மாட்டார்கள். அவர்களின் ஊழல் அரசியலை மக்கள் நன்கு புரிந்து வைத்துள்ளனர் என்று வானதி சீனிவாசன் உறுதிபடத் தெரிவித்தார்.
தமிழகத்தின் வளர்ச்சிக்கும் திமுக-வின் குடும்ப அரசியலுக்கும் இடையிலான போராக இந்தத் தேர்தல் இருக்கும் என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
பிரதமர் மோடி அவர்களின் கேரளப் பிரசாரத்திற்குப் பிறகு, தமிழகத்தில் பாஜக தனது பிரசாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளது. திமுக-வின் 525 வாக்குறுதிகளை 'சூப்பர் ஸ்டார்' என முதல்வர் வர்ணித்திருந்த நிலையில், அதை ஒரு 'டிபார்ட்மெண்டல் ஸ்டோர்' விளம்பரம் போல வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
பாஜக-வின் வேட்பாளர் பட்டியல் இன்று (மார்ச் 30) பியூஷ் கோயல் வருகைக்குப் பிறகு வெளியாகும் என்றும், அதில் தகுதியானவர்களுக்கு உரிய வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அவர் ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: திமுக அறிக்கை ஒரு காப்பி! 525 வாக்குறுதிகளை விளாசித்தள்ளிய எடப்பாடி பழனிசாமி!