ஆகாஷ் உயிரிழந்ததற்கு சிவகங்கை, மதுரை அரசு மருத்துவமனைகளிலும் உரிய சிகிச்சை அளிக்கவில்லை. அவர் இறப்புக்கு காவல்துறையினரின் மூர்க்கத்தனமான தாக்குதல், மருத்துவத்துறையின் அலட்சிபோக்கு, கிராமப்புறம் வரை பரவி இருக்கும் போதைபொருள் கலாச்சாரம் என விசிக தலைவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் ஆகாஷ் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் தெரிவித்து பின் விசிகத் தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆகாஷ்டெலிசன் இப்பகுதியில் கள்ளச்சாரயம், போதைபொருள் விற்பனை செய்தவரை தட்டிக் கேட்டுள்ளார். அவருக்கு எதிராக சில நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். இதனால் காவல்துறையினர் ஆகாஷ்டெலிசன் மீது ஆத்திரத்தில் இருந்துள்ளனர்.
அந்த சமயத்தில் ஒரு வழக்குக்காக ஆகாஷ்டெலிசன் உள்ளிட்ட இருவரை கைது செய்துள்ளனர். ஆகாஷ்டெலிசனை மட்டும் தனிமைப்படுத்தி, கால் எலும்பை உடைத்துள்ளனர். இதை பார்க்கும்போது கள்ளச்சாரயத்துக்கு எதிராக செயல்பட்டதால் தான் கால் எலும்பை உடைத்துள்ளனர்.மேலும், அவருக்கு சிவகங்கை, மதுரை அரசு மருத்துவமனைகளிலும் உரிய சிகிச்சை அளிக்கவில்லை. அவர் இறப்புக்கு காவல்துறையினரின் மூர்க்கத்தனமான தாக்குதல், மருத்துவத்துறையின் அலட்சிபோக்கு, கிராமப்புறம் வரை பரவி இருக்கும் போதைபொருள் கலாச்சாரம் ஆகியவை தான் காரணம். இந்த விஷயத்தை அரசு உரியமுறையில் புலனாய்வு செய்ய வேண்டும்.
இதையும் படிங்க: எஸ்மா சட்டத்தை திணிக்கும் மோடி அரசு... அலட்சியமே காரணம்... திருமாவளவன் கண்டனம்..!!
மேலும், உயர்நீதிமன்றம் உத்தரவின்பேரில் சிபிசிஐடி கொலை வழக்காக பதிவு செய்துள்ளது. சம்பந்தப்பட்ட போலீஸாரை உடனடியாக கைது செய்ய வேண்டும். அப்போது தான் சாட்சிகளை கலைக்காமல் பாதுகாக்க முடியும். தற்போது சிபிசிஐடி விசாரணையே போதும். விசாரணையை பொறுத்து எங்களது கருத்தை தெரிவிப்போம். பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் தாக்கப்படுவது இந்தியா முழுவதும் நடக்கிறது. தமிழகத்திலும் நடக்கிறது. இதை தடுக்க முதல்வர் தலைமையில் நடக்கும் விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டத்தில் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகிறோம்.
கடந்த காலங்களில் பட்டியலினத்தவர் தாக்கப்படும் சம்பவங்களில் புகார் கொடுத்தாலும் வழக்குகள் பதிவு செய்வதில்லை. ஆனால், தற்போது விழிப்புணர்வால் அதிகளவில் வழக்குகள் பதிவாகின்றன. வன்கொடுமையை தடுக்க போலீஸார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு அதற்கு போதிய வழிகாட்டுதலை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க: “அந்த அவசியம் எங்களுக்கில்ல...”... அதிமுகவை அலர்ட் செய்த திருமாவுக்கு நயினார் பதிலடி...!