கிராமத்தின் பெயர்களில் மற்றும் தெருக்களின் பெயர்களில் இருக்கும் சாதிப் பெயர்களையும் நீக்க வேண்டும் என்னும் கோரிக்கையை முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு முன் வைக்கிறோம் என்று விசிக தலைவர் திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் காலனி என்கிற சொல் நீக்கம் குறித்து பேசினார். "இந்த மண்ணின் ஆதிகுடிகளை இழிவுபடுத்தும் அடையாளமாக, 'காலனி' என்கிற சொல் பதிவாகியிருக்கிறது. ஆதிக்கத்தின் அடையாளமாகவும், தீண்டாமைக்கான குறியீடாகவும், வசை சொல்லாகவும் மாறியிருக்கிறது. இனி இந்தச் சொல், அரசு ஆவணங்களில் இருந்தும், பொது புழக்கத்தில் இருந்தும் நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்." என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார்.
முதவ்வரின் இந்த அறிவிப்புக்கு விசிக தலைவர் தொல். திருமாவளவன் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சோஷியல் மீடியா பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில், "வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பை முதல்வர் சட்டமன்றத்தில் அறிவித்திருக்கிறார். காலனி என்கிற சொல்லை எந்த ஆவணங்களிலும் பயன்படுத்தக் கூடாது என்கிற இந்த அறிவிப்பு போற்றுதலுக்குரியது.

தான் கருணாநிதியின் வழி வந்த தந்தை பெரியாரின் கொள்கை வழிவந்த கருத்தியல் வாரிசு என இதன் மூலம் அண்ணன் மு.க. ஸ்டாலின் உறுதிப்படுத்தியிருக்கிறார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது பாராட்டுகளையும் நன்றியையும் முதல்வருக்கு உரித்தாக்குகிறோம். அதே போல கிராமத்தின் பெயர்களில் மற்றும் தெருக்களின் பெயர்களில் இருக்கும் சாதிப் பெயர்களையும் நீக்க வேண்டும் என்னும் கோரிக்கையை முன்வைக்கிறோம்." என்று திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: திமுகவினர் மனங்களிலிருந்து 'காலனி' எப்போது அகலும்.? மு.க. ஸ்டாலினுக்கு எல். முருகன் நறுக் கேள்வி.!
இதையும் படிங்க: அமைச்சர் பொன்முடியை தூக்கி வீசுங்கள்.. ஆவேசத்தில் கொந்தளித்த நடிகை விந்தியா.!!