சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு செய்வதற்காக வரும் மக்களிடம் அதிகப்படியாக பணம் வசூல் செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால்
தமிழ்நாடு முழுவதும் இன்று மாலை பல்வேறு இடங்களில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் திடீரென லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை செய்தனர். தமிழகம் முழுவதும் 60க்கும் மேற்பட்ட அலுவலகங்களில் நேற்று மாலை களமிறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். தமிழகத்தில் 46 சார்பதிவாளர் அலுவலகங்களில் நடத்தப்பட்ட ரெய்டில் இதுவரை ரூ.37.75 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலகத்தில் உள்ள தருமபுரி மேற்கு சார் பதிவாளர் அலுவலகத்தில் தருமபுரி லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் திடீரென நுழைந்து சோதனை நடத்தினர். அப்பொழுது சர்பதிவாளர் பெரிய வேடியம்மாள் மற்றும் அலுவலகத்தில் உள்ள ஊழியர்களிடமும் விசாரணை நடத்தினர். மேலும் அலுவலர்களின் இருக்கை மேஜை, வாகனங்கள் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினர். இந்த சோதனை சுமார் 7 மணி நேரம் நடைபெற்றது. இறுதியில் முக்கிய ஆவணங்களோ பணமோ கைப்பற்றப்படவில்லை. இதனால் சோதனையை மட்டும் முடித்துவிட்டு லஞ்ச ஒழிப்பு துறையினர் அலுவலகத்திலிருந்து வெளியே சென்றனர். ஒருங்கிணைந்த பதிவு துறை அலுவலகத்தில் மேற்கு சார் பதிவாளர் அலுவலகத்தில் திடீரென லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகர், கச்சேரி தெரு பிரதான சாலையில் சார்பதிவாளர் அலுவலகத்தில் நாமக்கல் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையில் 8 பேர் கொண்ட குழுவினர் நடத்திய சோதனையில், அலுவலகத்தில் இருந்த மேசை இடுக்கில் துணியில் சுற்றப்பட்ட நிலையில் ரூ.50 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல் அலுவலகத்திற்கு தொடர்பு இல்லாமல் இருந்த சேலத்தை சேர்ந்த செல்வகுமார் என்பவரிடம் இருந்து ரூ.17 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: தமிழகமே பரபரப்பு... சார் பதிவாளர் அலுவலகங்களில் ரெய்டு... லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி...!
திருவள்ளூரில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் கணக்கில் வராத 1.75 லட்சம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். அதிகாரிகளின் இருக்கைகள் மேஜைகள் கீழே சிதறிக் கிடந்த 1,75,500 ரூபாய் ரொக்க பணத்தை போலீசார் பறிமுதல் செய்து அத்தகைய பணம் யாரிடம் இருந்து பெறப்பட்டது எதற்காக பெறப்பட்டது என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். ஈரோடு மாவட்டம் பவானி சார்பதிவாளர் அலுவலகத்தில் டிஎஸ்பி சாந்தி தலைமையிலான லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் நடத்திய சோதனையில்,தலைமை எழுத்தர் வைடூரியம், இடைத்தகரார்கள் தினேஷ் மற்றும் ஹரிஹரன் ஆகியோரிடம்
இதேபோல் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை நடத்தினர் இதில் கணக்கில் வராத பணம் 5000 ரூபாய் மற்றும் சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றப்பட்டது. காரைக்குடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் நடந்த சோதனையின் போது, தனியார் டாக்குமெண்ட்ஸ் ரைட்டர் அலுவலகத்தில் பணிபுரியும் புரோக்கர் ஒருவரிடம் கணக்கில் வராத பணம் 73 ஆயிரம் ரூபாய் இருந்தது கண்டறியப்பட்டு அதை லஞ்ச ஒழிப்பு துறையினர் பறிமுதல் செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், கணக்கில் வராத 2 லட்சத்து 53 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டதோடு, 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஓசூர் அருகே சூளகிரி சார் பதிவாளர் அலுவலகத்தில் இலஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 1.50 இலட்சம் ரூபாய் பணம் சிக்கியது.
சேலம் கிழக்கு ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீரென நுழைந்ததை பார்த்ததும், அங்கிருந்த புரோக்கர்கள் லஞ்சப் பணத்தை திடீரென ஜன்னல் வழியாக வீசியதாக கூறப்படுகிறது. இந்த சோதனையில் கணக்கில் வராத 3,18,700 ரூபாய் பணத்தை
லஞ்ச ஒழிப்பு போலீசார் , கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராசிபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் மேசை இடுக்கிற்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.67,500 பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: ஆய்வு என்ற பெயரில் அத்துமீறல்... ரீல்ஸ் வெறியில் நகராட்சி அலுவலகத்திற்குள் தவெக நிர்வாகி செய்த காரியம்...!