தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜயின் கரூர் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. காயமடைந்த பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
கரூரில் உள்ள வேலுசாமிபுரத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் விஜயை நேரில் காண வந்தனர். போலீஸ் அனுமதி மனுவில் 10 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்பார்கள் என்று குறிப்பிட்டிருந்த போதிலும், உண்மையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் திரண்டனர், விஜய் 6 மணி நேரம் தாமதமாக வந்ததால், வெயில் வாட்டும் பகலில் காத்திருந்த மக்கள் சோர்வடைந்தனர். குழந்தைகள் மற்றும் பெண்கள் அதிகம் இருந்ததால், 9 வயது சிறுமி ஒருவர் காணாமல் போனதாக வந்த தகவல் கூட்டத்தை இன்னும் குழப்பமானதாக்கியது. இதனால் ஏற்பட்ட அச்சத்தால் மக்கள் ஒரே நேரத்தில் வெளியேற முயன்றபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இச்சம்பவத்தை அறிந்ததும் உடனடியாக கரூர் மாவட்ட ஆட்சியர், போலீஸ் உயரதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இது துயரமான சம்பவம். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்படும் என்று அறிவித்தார். சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்டவர்களை ஆறுதல்படுத்தினர்.
இதையும் படிங்க: #BREAKING: DMK FAILS… ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி எதிர்க்கட்சிக்கு ஒரு நீதி… சாட்டையை சுழற்றிய இபிஎஸ்…!
அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு முதலமைச்சர் ஸ்டாலின் கரூர் மாவட்டத்திற்கு சென்று உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார். இறந்தவர்களின் உடல்களுக்கும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும், கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், கரூரில் நடந்த துயரத்தை பார்த்து வீட்டில் இருக்க முடியவில்லை எனவும் சம்பவம் தொடர்பாக ஒரு நபர் ஆணையம் அமைக்க உத்தரவிட்டுள்ளேன் எனவும் கூறினார். அரசியல் நோக்கத்தோடு எதையும் கூற விரும்பவில்லை என்றும் கூறினார். விஜய் கைது செய்யப்படுவாரா என்ற கேள்விக்கு பதில் அளித்த முதலமைச்சர், ஒரு நபர் ஆணையம் மூலம் உண்மை வெளிவரும் என்றும் ஆணையம் அளிக்கும் அறிக்கைப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: #BREAKING: அசாதாரண நிலை.. இரவோடு இரவாக கரூர் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின்... உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி...!