மதுரையில் இருந்து சாலை மார்க்கமாக காரைக்குடிக்கு வருகை தரும் விஜய் மீண்டும் மதுரை விமான நிலையத்திற்கு செல்லாமல் புதுக்கோட்டை வழியாக திருச்சி விமான நிலையத்திற்கு செல்வதாக காவல்துறையினர் தகவல்
காரைக்குடியில் இன்று பிற்பகல் 12: 30 மணிக்கு தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொள்கிறார். அவர் பரப்புரை மேற்கொள்ள காவல் துறை மற்றும் நிர்வாகம் சார்பில் 37 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக அதில் விஜய் எந்த வழியில் பிரச்சாரம் மேற்கொள்ள வருகிறாரோ அதே வழியில் தான் செல்ல வேண்டும் என்றும் உள்ள நிலையில் மதுரை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக காரைக்குடிக்கு வருகை தரும் விஜய் மீண்டும் மதுரை விமான நிலையத்திற்கு செல்ல வேண்டும்.
இதையும் படிங்க: வெற்றி விசிலுக்கே..! ஓட்டுக்கு 10 ஆயிரம்... பகல் கனவு பலிக்காது..!! ஆதவ் விளாசல்..!!
ஆனால் தற்போது மதுரை விமான நிலையத்திற்கு செல்லாமல் காரைக்குடியில் இருந்து சாலை மார்க்கமாக புதுக்கோட்டை வழியாக திருச்சி விமான நிலையத்திற்கு செல்ல உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் புதுக்கோட்டையை கடந்து திருச்சி செல்லும் விஜய்க்கு திருமயம் மற்றும் புதுக்கோட்டை கட்டியா வயல் பிரிவு சாலையில் அக்கட்சியை சேர்ந்தவர்கள் வரவேற்பு கொடுக்க திட்டமிட்டுள்ள நிலையில், அதுபோன்ற எந்த ஒரு வரவேற்பையும் கட்சியினர் கொடுக்கக் கூடாது அதற்கு எந்த ஒரு அனுமதியும் காவல்துறையினர் அளிக்கவில்லை. அதையும் மீறி கொடுத்தால் விதிமீறல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே முறையான ஏற்பாடுகளை செய்யாததால் தான் விஜய்க்கு தேர்தல் அதிகாரிகளும், காவல்துறையும் அனுமதி அளிப்பதி அளிப்பதில்லை எனக்கூறப்படுகிறது. அதனையே ஒரு காரணமாக வைத்து விஜய் பிரசாரத்தை தவிர்க்கிறார் என திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் தவெகவினர் வரவேற்பு அளிக்க காவல்துறை அனுமதிக்க அளிக்காத நிலையில், மதுரை விமான நிலையத்திற்கு செல்லாமல் புதுக்கோட்டை வழியாக திருச்சி விமான நிலையம் செல்வது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தவெகவினர் நிச்சயம் புதுக்கோட்டை டு திருச்சி செல்லும் சாலையில் விஜய்க்கு வரவேற்பு அளித்தால் அது புதிய பிரச்சனைக்கு அடித்தளமிடுவது போல் ஆகும் என அரசியல் விமர்சகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: விஜய் பரப்புரையின்போது விபத்து..! தவெக நிர்வாகிகள் மீது பாய்ந்த வழக்குகள்..!!