தமிழ் சினிமாவின் தளபதி என்று அழைக்கப்படும் நடிகர் விஜய், தனது திரை வாழ்க்கையின் மூலம் தமிழக மக்களின் இதயங்களை கைப்பற்றியவர். ஆனால், அவரது அரசியல் பயணம் தொடங்கியபோது, அந்த ரசிகர்களின் அன்பு இன்னும் ஆழமான, உணர்ச்சிகரமான வடிவத்தை அடைந்தது.
2024 பிப்ரவரி 2 அன்று தமிழக வெற்றி கழகம் (த.வெ.க) என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கியபோது, விஜயின் ரசிகர்கள் அது வெறும் கட்சி அல்ல, அவர்களின் கனவுகளுக்கான ஒரு இயக்கம் என்று உணர்ந்தனர். இந்த அன்பு, வெறும் பட ரசிகர்களின் உற்சாகத்தைத் தாண்டி, அரசியல் அடிப்படை உருவாகி, ஆதரவு பெற்றுள்ளார். சமீபத்தில் நிகழ்ந்த கரூர் சம்பவம் தமிழக வெற்றி கழகத்திற்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தியது.

அதிலிருந்து மீண்டும் தமிழக வெற்றி கழகம் மீண்டும் கட்சி பணியை தீவிரப்படுத்தி வருகிறது. தமிழகத்தில் தீவிரமாக அரசியல் களமாடும் நிலையில், வரும் டிசம்பர் 5ஆம் தேதி தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் புதுச்சேரி செல்கிறார். கட்சி தொடங்கிய பிறகு முதல் முறையாக விஜய் புதுச்சேரி மாநிலத்திற்கு செல்கிறார். புதுச்சேரியில் ரோடு ஷோ செல்ல விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 15 நிமிடத்தில் என்ன ஆச்சு? - புறப்பட்ட வேகத்திலேயே மீண்டும் வீடு திரும்பிய செங்கோட்டையன்...!
காலப்பட்டு, அஜந்தா சிக்னல், உப்பளம், மரப்பாலம், அரியாங்குப்பத்தில் மக்கள் சந்திப்பு நடத்த விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து உப்பளம் சோணாம்பாளையத்தில் பொதுமக்கள் முன்பு விஜய் உரையாற்ற உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 2வது நாளாக துருவி துருவி விசாரணை... பற்ற வைத்த நிர்மல்குமார்... கரூர் விவகாரத்தில் சிபிஐக்கு கிடைத்த முக்கிய தகவல்...!!