தமிழக அரசியலில் புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ள நிலையில், தமிழக வெற்றி கழக தலைவரும் முதல்வருமான விஜய் இன்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை சந்திக்கிறார். மரியாதை நிமித்தமாக நடைபெறும் இந்த சந்திப்பு, சென்னை அண்ணா நகரில் உள்ள வைகோவின் இல்லத்தில் பிற்பகல் 3:30 மணிக்கு தொடங்க உள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-ல் தவெக பெரும் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் சூழலில், திராவிட இயக்கங்களின் மூத்த தலைவரான வைகோவை முதல்வர் விஜய் சந்திப்பது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெறுகிறது. இரு தரப்பினரும் இதை மரியாதை சந்திப்பாகவே கூறுகின்றனர்.

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பல்வேறு கட்சித் தலைவர்கள் விஜயை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், வைகோவின் சந்திப்பு கூடுதல் கவனத்தை ஈர்க்கிறது. வைகோ, திராவிட இயக்கங்களின் கொள்கைகளை உறுதியாகப் பின்பற்றுபவர் என்பதால், இந்த சந்திப்பில் தமிழகத்தின் எதிர்கால அரசியல், கொள்கை ரீதியான விவாதங்கள், மக்கள் பிரச்னைகள் உள்ளிட்டவை இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஸ்டாலின் தோற்றது 'அண்ணா'வே தோற்றது போல் இருக்கிறது..!! உருக்கமாக பேசிய வைகோ..!!
முன்பு தவெகவைப் பற்றி பல்வேறு கருத்துகளை வெளியிட்டிருந்த வைகோ, மக்கள் தீர்ப்பை மதிப்பதாகவும், ஜனநாயகத்தைப் பின்பற்றுவதாகவும் பல சந்தர்ப்பங்களில் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பு தமிழக அரசியலில் புதிய கூட்டணி அல்லது ஒத்துழைப்பு சாத்தியங்களை உருவாக்குமா என்பது அடுத்த சில நாட்களில் தெளிவாகும். மரியாதை நிமித்தமாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை விஜய் சந்திக்க உள்ளது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: பிச்சை போடுறேன்!! சாட்டையை சுழட்டுவேன்! வாய்விட்ட துரை வைகோ! கூண்டோடு காலியாகும் ஈரோடு மதிமுக!