தமிழக வெற்றி கழகத்துடைய தலைவர் விஜய் தேர்தல் மேலாண்மை அலுவலகத்தில் மாநாடு பணிகள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்களுக்கான பணிகள் உள்ளிட்டவற்றுக்கான ஆய்வு கூட்டத்தை நடத்தி இருக்கிறார். நேற்றைய தினம் சேனாம்பேட்டை அருகே அமைந்திருக்கக்கூடிய தனியார் தேர்தல்கள் நிறுவனம் அதாவது வாய்ஸ் ஆப் காமன் தனியாக தவெக்கவுக்காக செயல்படக்கூடிய வார் ரூம் ஒன்றை தொடங்கி இருக்கின்றனர். அந்த இடத்திற்கு இரண்டாவது முறையாக ஆய்வு செய்வதற்காக வந்திருந்த விஜய் முக்கிய நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார். இந்த கூட்டத்தில கட்சியுடைய பொதுச் ஆனந்த், அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி, தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, துணை பொதுச்செயலாளர் சிபிஆர் நிர்மல் குமார் ஆகியோர் பங்கு பெற்றிருக்கிறார்கள்.
கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் இந்த கூட்டம் என்பது நடைபெற்றது. தவெகவின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் அடுத்த மாதம் 25ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கான பணிகள் எவ்வாறு நடைபெற்று வருகிறது என்பதையும் ஆய்வு மேற்கொண்டவர்களிடம் விஜய் கேட்டறிந்து கொண்டிருக்கிறார். அத்துடன் மாநாட்டுக்கான என்னென்ன பணிகளை செய்ய வேண்டும் என்றும் கட்சி தலைவர் நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
அதே சமயம் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலின் செயல்பாடுகள், அதில் இணைக்கப்பட்டுள்ள தகவல்கள், அதன் மூலம் பதிவு செய்ய வேண்டிய ஆய்வுகள் உள்ளிட்டவற்றையும் விஜய் நிர்வாகிகளுக்கு விளக்கியுள்ளார். இது மட்டுமல்லாமல் முக்கிய முடிவாக பூத் கமிட்டி நிர்வாகிகள் அந்தந்த பூத்தை சேர்ந்தவர்கள் இல்லாமல், வேறு பூத்துகளை சேர்ந்தவர்களை நியமனம் செய்துள்ள நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் விஜய் அறிவுறுத்திருக்கிறார். “மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் விஜய்” என வீடு வீடாக சென்று பிரச்சாரத்தை நிர்வாகிகள் தொடங்கியுள்ள நிலையில், பூத் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் கிளைக்கழக நிர்வாகிகள் வீடு வீடாக சென்று மக்கள் பிரச்சினைகளை கேட்கவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: “எடப்பாடி பழனிசாமியை விஜய் ஏற்க மாட்டார்” - அதிமுகவை சீண்டி பார்க்கும் பாஜக...!
மேலும் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு நிர்வாகிகள் நேரில் செல்கிறார்களா? மாவட்ட செயலாளர்கள் கண்காணிப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்பதை பொதுச் செயலாளருக்கும் அதன் இன்னபிற நிர்வாகிகளுக்கும் தலைவர் விஜய் அறிவுறுத்தல்களை வழங்கி இருக்கிறார். 2026 தேர்தலுக்கான பணிகள் அனைத்து கட்சிகளும் தொடங்கி இருக்கக்கூடிய சூழலில் தமிழக வெற்றி கழகமும் அதற்கான பணிகளை விரிவுபடுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: ஆக.25.. இந்த தேதிக்கு பின்னால் உள்ள ரகசியம்.. விஜய் மாநாட்டை நடத்த இதுதான் காரணமா..?