தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வரும் 16 ஆம் தேதி முதல் 18ஆம் தேதிக்குள் தொடங்க வாய்ப்புள்ளது என்றும் இந்த ஆண்டு 50 செ.மீ. வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் அமுதா தெரிவித்தார்.
கடந்த 25 ஆண்டுகளில் வடகிழக்கு பருவமழை காலத்தில் மட்டுமே அதிக காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் புயல் சின்னங்கள் உருவாகி இருக்கும் சூழலில், அதேபோல் இந்த ஆண்டு நிறைய புயல்கள் உருவாக வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறி இருந்தார். ஒவ்வொரு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. சமீப நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை தீவிரமடைந்துள்ளது.

தேனி மாவட்டம் சுருளி அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் சுற்றுலாப் பயணிகள் குறைக்க இரண்டாவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. சுருளி அருவியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பயணிகளின் பாதுகாப்பு கருதி குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தென்காசி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையின் காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குற்றாலத்தில் உள்ள அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் சுற்றுலாப் பயணிகள் குறிக்க நான்காவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கடும் போக்குவரத்து நெரிசல்... ஸ்தம்பித்தது ஜி.எஸ்.டி சாலை... திணறும் மக்கள்...!
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்ட உள்ளது. கொடிவேரி அணையில் வினாடிக்கு ஆயிரம் கன அடி நீர் வரை வெளியேறுவதால் குளிக்கவும் பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கனமழையின் காரணமாக அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: இந்த 5 நாட்கள் பக்தர்கள் சதுரகிரிக்கு செல்ல தடை..!! காரணம் இதுதான்..!!