• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    #BREAKING: திமுக தேர்தல் அறிக்கை 2026: மகளிர் உரிமைத் தொகை ₹2000, 10 லட்சம் வீடுகள் - அதிரடி வாக்குறுதிகள்!

    மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் | தலைப்புச் செய்திகளாக வெளியானது திமுகவின் தேர்தல் அறிக்கை!
    Author By Thenmozhi Kumar Sun, 29 Mar 2026 18:39:03 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    dmk-manifesto-2026-magalir-urimai-thogai-hiked-to-2000

    தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) பிரம்மாண்டமான தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டார். சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம் என்ற தாரக மந்திரத்துடன், அடித்தட்டு மக்கள், மாணவர்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலான 15 முக்கியத் திட்டங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

    நாளை திருவாரூரில் இருந்து முதல்வர் தனது பிரசாரத்தைத் தொடங்கவுள்ள நிலையில், இந்த அறிவிப்புகள் தேர்தல் களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

    திமுக தேர்தல் அறிக்கையின் 15 முக்கிய அம்சங்கள்:

    மகளிர் உரிமைத் தொகை உயர்வு: கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் தற்போது வழங்கப்பட்டு வரும் ₹1000 உதவித்தொகை, இனி ₹2000-ஆக உயர்த்தி வழங்கப்படும்.

    இதையும் படிங்க: தேர்தல் களம் சூடுபிடிப்பு: எடப்பாடி பழனிசாமியின் காரை வழிமறித்து சோதனை செய்த தேர்தல் பறக்கும் படை!

    காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம், இனி 8-ஆம் வகுப்பு வரை பயிலும் கூடுதலாக 15 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்தப்படும்.

    தமிழக சட்டமன்ற தேர்தல்

    முதியோர் & மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை: முதியோர் உதவித்தொகை ₹1,200-லிருந்து ₹2,000-ஆகவும், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை ₹1,500-லிருந்து ₹2,000-ஆகவும் உயர்த்தி வழங்கப்படும்.

    உயர்கல்வி ஊக்கத்தொகை: புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டங்களின் கீழ் உயர்கல்வி மாணவர்களுக்கு வழங்கப்படும் மாதந்திரத் தொகை ₹1,000-லிருந்து ₹1,500-ஆக உயர்த்தப்படும்.

    விவசாயிகளுக்கான சலுகைகள்: இலவச மின்சாரம் பெறும் விவசாயிகளுக்கு மீட்டர்கள் பொருத்தப்படாத நவீன மின்சார பம்பு செட்டுகள் வழங்கப்படும். மேலும், நெல் குவிண்டால் ஒன்றுக்கு ₹3,500 வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    பால் & மீன்பிடி நிவாரணம்: பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ₹5 உயர்த்தப்படும். மீனவர்களுக்கான மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை ₹12,000-ஆக உயர்த்தி வழங்கப்படும்.

    வீட்டு வசதி & சுய உதவிக்குழுக்கள்: அடுத்த 5 ஆண்டுகளில் ஏழை எளிய மக்களுக்காக 10 லட்சம் புதிய வீடுகள் கட்டித் தரப்படும். மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ₹5 லட்சம் வரை மானியத்துடன் பிணையில்லா வங்கிக்கடன் வழங்கப்படும்.

    தமிழ் மொழிப் பாதுகாப்பு: சென்னையில் உலகத்தரம் வாய்ந்த செம்மொழி மாநாடு மீண்டும் நடத்தப்படும்.

    இந்தத் தேர்தல் அறிக்கை குறித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், "இது வெறும் காகிதம் அல்ல, மக்களின் உணர்வு" என்று குறிப்பிட்டார். தவெக தலைவர் விஜய் அவர்கள் திமுக-வை 'ஊழல் கட்சி' என்று விமர்சித்துள்ள சூழலில், மக்கள் நலத்திட்டங்களை முன்னிறுத்தி ஸ்டாலின் தனது தேர்தல் வியூகத்தை வகுத்துள்ளார். நாளை மாலை கூட்டணி கட்சித் தலைவர்களுடன் ஆலோசனையும், தேநீர் விருந்தும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    தமிழகத்தில் ஏப்ரல் 23-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக-வின் இந்த 'மெகா' அறிவிப்புகள் மற்ற கட்சிகளுக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது.

    இதையும் படிங்க: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பட்டியல் 2026: ராமசந்திரன், மாரிமுத்து உள்பட 5 பேர் போட்டி!

    மேலும் படிங்க
    "இணையத்தைக் கலக்கும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி!"  உச்ச நீதிமன்ற நீதிபதியின் விமர்சனத்திற்கு எதிராக திரண்ட இளைஞர்கள்!

    "இணையத்தைக் கலக்கும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி!"  உச்ச நீதிமன்ற நீதிபதியின் விமர்சனத்திற்கு எதிராக திரண்ட இளைஞர்கள்!

    இந்தியா
    "தமிழக சட்டப்பேரவையில் குதிரை பேரம்?": தவெக பெரும்பான்மைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

    "தமிழக சட்டப்பேரவையில் குதிரை பேரம்?": தவெக பெரும்பான்மைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

    தமிழ்நாடு
    "ரீல்ஸ் Content போட டாக்டர் வேஷமா?": அரசு மருத்துவமனைகளில் தவெக ஆய்வுக்கு அதிமுக ஐடி விங் கடும் கண்டனம்!

    "ரீல்ஸ் Content போட டாக்டர் வேஷமா?": அரசு மருத்துவமனைகளில் தவெக ஆய்வுக்கு அதிமுக ஐடி விங் கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை.. 12 மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை..!

    தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை.. 12 மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை..!

    தமிழ்நாடு
    கூட்டணி ஆட்சி அமைக்கிறார் முதல்வர் விஜய்.. நாளை காலை 10 மணிக்குத் தமிழக அமைச்சரவை விரிவாக்கம்!  

    கூட்டணி ஆட்சி அமைக்கிறார் முதல்வர் விஜய்.. நாளை காலை 10 மணிக்குத் தமிழக அமைச்சரவை விரிவாக்கம்!  

    தமிழ்நாடு
    அமைச்சரவை விரிவாக்க விழா: சிபிஐ கட்சிக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்தார் அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார்!

    அமைச்சரவை விரிவாக்க விழா: சிபிஐ கட்சிக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்தார் அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "தமிழக சட்டப்பேரவையில் குதிரை பேரம்?": தவெக பெரும்பான்மைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

    தமிழ்நாடு

    "ரீல்ஸ் Content போட டாக்டர் வேஷமா?": அரசு மருத்துவமனைகளில் தவெக ஆய்வுக்கு அதிமுக ஐடி விங் கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    கூட்டணி ஆட்சி அமைக்கிறார் முதல்வர் விஜய்.. நாளை காலை 10 மணிக்குத் தமிழக அமைச்சரவை விரிவாக்கம்!  

    கூட்டணி ஆட்சி அமைக்கிறார் முதல்வர் விஜய்.. நாளை காலை 10 மணிக்குத் தமிழக அமைச்சரவை விரிவாக்கம்!  

    தமிழ்நாடு
    எல்லாம் ரீல்ஸ் வெறி... ‘மாஸ்’ காட்ட மைக் பிடித்த துணை சபாநாயகர் ... மக்கள் மத்தியில் அதிகாரிக்கு ‘அலப்பறை’...!

    எல்லாம் ரீல்ஸ் வெறி... ‘மாஸ்’ காட்ட மைக் பிடித்த துணை சபாநாயகர் ... மக்கள் மத்தியில் அதிகாரிக்கு ‘அலப்பறை’...!

    தமிழ்நாடு
    “காலவரையற்ற வேலை நிறுத்தம்”... மத்திய, மாநில அரசுகள் தலையில் இடியை இறக்கிய மருந்து வணிகர்கள் சங்கம்...! 

    “காலவரையற்ற வேலை நிறுத்தம்”... மத்திய, மாநில அரசுகள் தலையில் இடியை இறக்கிய மருந்து வணிகர்கள் சங்கம்...! 

    தமிழ்நாடு
    59 ஆண்டுகளுக்குப் பின் தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்.. ராஜேஷ்குமார், விஸ்வநாதன் நாளை பதவியேற்பு!

    59 ஆண்டுகளுக்குப் பின் தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்.. ராஜேஷ்குமார், விஸ்வநாதன் நாளை பதவியேற்பு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share