ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான்.. தன் கண்ணீரை மூடிக்கொண்டு இன்பம் கொடுப்பான்.. இந்த பாடல் வரிகளுக்கு முழு விளக்கமாகவும், அர்த்தமாகவும் அமைந்துள்ளது அருண் விஜயின் வெற்றி. முறை மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் என்ட்ரி அருண் விஜய்க்கு பெரியதளவில் எந்த படமும் வெற்றி பெறவில்லை.
திரை உலக பயணத்தில் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்த அருண் விஜக்கு கௌதம் மேனன் இயக்கிய என்னை அறிந்தால் படம் பெருமளவில் அவருக்கு பெயர் பெற்ற படமாக அமைந்தது. அதுமட்டுமின்றி அவரது திரையுலக பயணத்தில் இந்தப் படம் திருப்புமுனையாகவும் அமைந்தது.

என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு வில்லனாக அசாத்திய நடிப்பை வெளிப்படுத்திய அருண் விஜய்க்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த வெற்றியை தக்க வைத்துக் கொள்ள நினைத்த அருண் விஜய், தொடர்ந்து அவர் நடிக்கும் படங்களின் அதிக அளவில் கவனம் செலுத்தினார்.
இதையும் படிங்க: 'டெஸ்ட்' படத்தில் ஹீரோ மாதவனுக்கு நிகராக சம்பளம் வாங்கிய நயன்தாரா... எவ்வளவு தெரியுமா?
தொடர்ந்து தடம், குற்றம் 23, செக்க சிவந்த வானம் என அவர் நடித்த அடுத்தடுத்த படங்கள் வெற்றியை தேடி தந்தன. இந்த நிலையில் தான் இயக்குனர் பாலாவுடன் கைகோர்த்தார் அருண் விஜய். பாலா அருண் விஜய் காம்போ ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்தது.

இந்த எதிர்பார்ப்பை கொஞ்சம் கூட தளரவிடாமல், வணங்கான் படம் அமைந்தது. நல்ல கதையுடன் அருண் விஜயின் எதார்த்த நடிப்பும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. நல்ல கதை களத்துடன் நகர்ந்த வணங்கான் திரைபடம் அனைவரும் போற்றும் படமாகவும் அமைந்தது.
இந்த நிலையில் சென்னை ஐஐடி TECHFOES 2025 மெட்ராஸ் வளாகத்தில் ஆண்டுதோறும் தமிழ் திரைப்படத் துறையில் சிறந்த படைப்புகளை கௌரவிக்கும் வகையில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறந்த படைப்பாக வணங்கான் படம் தேர்வு செய்யப்பட்டு சிறந்த முன்னணி நடிகருக்கான விருது அருண் விஜய்க்கு வழங்கப்பட்டது.

இது தொடர்பான புகைப்படங்களை அருண் விஜய் அவரது சமூக வலைதளங்களில் பகிர்ந்து அவரது மகிழ்ச்சியை ரசிகர்களுடன் கொண்டாடியுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகின்றன.
இதையும் படிங்க: வரும் திங்கள் முதல் ஜீ தமிழ் சீரியல்கள் ஒளிபரபரப்பில் அதிரடி மாற்றம் - முழு விவரம் இதோ !