தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சூர்யா, ஜூலை 23ம் தேதியான இன்று தனது 50வது பிறந்தநாளை உற்சாகத்துடன் கொண்டாடி வருகிறார். சென்னையில் குடும்பத்துடன் கேக் வெட்டி, மகிழ்ச்சியைப் பகிர்ந்த சூர்யாவுக்கு, ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். அவரது இளமை ததும்பும் தோற்றமும், ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

சூர்யாவின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு, ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் ‘கருப்பு’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி, ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் த்ரிஷா, யோகி பாபு, நட்டி நட்ராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மேலும், வெங்கி அட்லூரி இயக்கத்தில் ‘சூர்யா 46’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முடிந்து, இதன் போஸ்டரும் வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: கருப்பன் வரான் வழி மறிக்காதே.. மாஸ் அப்டேட் கொடுத்த ஆர்.ஜே பாலாஜி..!
https://x.com/i/status/1947932901779378187
சூர்யாவின் ரசிகர்கள், இந்த சிறப்பு நாளில் தமிழகம், கேரளா, கர்நாடகாவில் இரத்ததான முகாம்கள், அன்னதானம், வேலைவாய்ப்பு முகாம்கள் போன்ற நலத்திட்டங்களை முன்னெடுத்து, அவரது சமூக அக்கறையை பிரதிபலித்தனர். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 353 ரசிகர்கள் இரத்ததானம் செய்தனர். சூர்யாவின் ‘அயன்’ படத்தின் தெலுங்கு பதிப்பு ‘வீடோக்கடே’ ஆந்திரா, தெலங்கானாவில் மீண்டும் வெளியாகிறது.
‘நேருக்கு நேர்’ முதல் ‘சூரரைப் போற்று’ வரை தரமான படங்களைத் தந்த சூர்யா, நடிப்பு மட்டுமல்லாமல், அகரம் அறக்கட்டளை மூலம் சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார். அவரது 50வது பிறந்தநாள், ரசிகர்களுக்கு மகிழ்ச்சியையும், சினிமாவுக்கு புதிய எதிர்பார்ப்பையும் அளித்துள்ளது.

இந்நிலையில் சூர்யாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்வதற்காக பல ரசிகர்கள் அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது வீட்டு மொட்டை மாடியில் நின்றபடியே ரசிகர்களுக்கு சூர்யா கை அசைத்து நன்றி கூறி இருக்கிறார். அப்போது ரசிகர்கள் சூர்யா.. சூர்யா.. என கத்தி ஆரவாரம் செய்தனர். பிறகு மாடியில் நின்றபடியே ரசிகர்கள் தெரியும் மாதிரி செல்பி புகைப்படங்களையும் எடுத்திருக்கிறார்.
அதுமட்டுமின்றி தன்னுடைய ரசிகர்களுக்கு flying kiss அனுப்பி இருக்கிறார் சூர்யா. அப்போது ஒரு ரசிகர் தெருவில் இருந்தபடியே பூங்கொத்து ஒன்றை தூக்கி வீச, அதை சூர்யா எதிர்பார்க்கவில்லை என்றாலும் சட்டென கேட்ச் பிடித்து இருக்கிறார். இந்த சம்பவத்தை நொடிப்பொழுதில் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தாலும் அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்திருக்கிறார்கள். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: கருப்பன் வரான் வழி மறிக்காதே.. மாஸ் அப்டேட் கொடுத்த ஆர்.ஜே பாலாஜி..!