தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் சூர்யா. 1997ல் நேருக்கு நேர் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். ஆரம்பத்தில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்த இவர் பிறகு மாஸான கேரக்டரில் நடித்து மக்கள் மனதில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தார். ஆனால் நடிகர் சூர்யாவிற்கு சில வருடங்களாகவே நேரம் சரியில்லை தான் போல. அவர் நடிக்கும் திரைப்படங்கள் இப்போது அவருக்கு பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. அவர் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே அதிகமான ட்ரோல் செய்யப்படுகிறது. அது கூட அவருடைய படம் ஃபிளாப் ஆவதற்கு காரணமா? என்று அவருடைய ரசிகர்கள் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.

2024ல் சிறுத்தை சிவா இயக்கிய பிரம்மாண்ட வரலாற்று ஆக்ஷன் படம் தான் கங்குவா. இதில் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்தார். இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தொடர்ந்து இந்த வருடம் தொடக்கத்தில் வெளியான சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம், ஓரளவு வரவேற்பை பெற்றது.
இதையும் படிங்க: அடுத்த மாதம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட் இருக்கு.. சஸ்பென்ஸ் வைத்த ஆர்.ஜே. பாலாஜி..!
இதனையடுத்து நடிகர் சூர்யா, தன்னுடைய அடுத்த படத்தில் இறங்கி இருக்கிறார். அதுவும் நடிகரும் இயக்குனருமான ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் தன்னுடைய 45வது படத்தில் சூர்யா கமிட் ஆகி இருக்கிறார். இந்த படத்தை ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்துள்ளது. "கட்சி சேரா", "ஆச கூட" போற்ற பாடல்களை இசையமைத்து பிரபலமான சாய் அபயங்கர் சூர்யா 45 படத்திற்கு இசையமைத்துள்ளார்.
அதேபோல் இந்த படத்திற்கு ஜிகே விஷ்ணு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கதாநாயகியாக திரிஷா நடித்திருக்கிறார். மேலும், சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ஆர் ஜே பாலாஜியின் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த ஜூன் 20ம் தேதி, சூர்யா படத்தின் டைட்டிலை போஸ்டர் உடன் திரை குழுவினர் வெளியிட்டனர். இந்த படத்திற்கு "கருப்பு" என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.

ஆன்மீகம் கலந்த திரில்லர் படைப்பாக இப்படத்தின் ஷுட்டிங் எல்லாம் நிறைவடைந்துள்ள நிலையில், இன்னமும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் இருக்கிறது. நடிகர் சூர்யா வரும் 23 ஆம் தேதி தனது 50வது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். பொதுவாகவே நடிகர்களின் பிறந்தநாளில் அவர்கள் நடிக்கும் படங்களின் அப்டேட்கள் வெளியாகும். அந்த வகையில் சூர்யாவின் பிறந்தநாளில் கருப்பு மற்றும் அவர் நடித்து வரும் படங்கள் குறித்தான அறிவிப்புகள் வெளியாகும் என கடந்த சில நாட்களாகவே அவருடைய ரசிகர்கள் இணையத்தில் எதிர்பார்ப்புடன் பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் இயக்குனர் ஆர்.ஜே பாலாஜி, தனது எக்ஸ் தளத்தில் "கருப்பன் வரான் வழி மறிக்காதே 🔥" என்று பதிவிட்டு புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். சூர்யாவின் பிறந்தநாளான 23ம் தேதி அன்று கருப்பு படத்தின் டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைக்கேட்ட ரசிகர்கள் மிகுந்த குஷியில் உள்ளனர்.
இதையும் படிங்க: 'ஜெய் பீம்' பாத்தாச்சு..அடுத்து 'கருப்பு' தான்..! ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் மீண்டும் சூர்யா.. ஜோதிகா கூட்டணி.. டீசர் பார்க்கலாமா..!