தமிழ் சினிமாவில் முன்னணி இடத்தை பிடித்தே ஆகவேண்டும் என்கிற முனைப்போடு வாய்ப்பு தேடி கொண்டிருப்பவர் தான் ஷிவானி நாராயணன்.

விஜய் டிவி சீரியல் மூலமா அறிமுகமான ஷிவானி நாராயணனுக்கு... அப்போதிலிருந்து இப்போது வரை பக்க பலமா இருந்து வருபவர் ஷிவானி நாராயணனின் அம்மா தான்.

இதையும் படிங்க: சித்ரா பவுர்ணமி நாளில் பயபக்தியாக மாறிய ஷிவானி நாராயணன்!
ஷிவானி காதல் சர்ச்சையில சிக்கிய போதும் கூட, அதை ரொம்ப திறமையாக கையாண்டவர் ஷிவானினியின் தாயார். ஒரு கட்டத்தில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை பக்கம் ஷிவானி கவனம் திரும்பிய நிலையில, அதிரடியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

ஆரம்பத்தில் இருந்தே ரொம்ப டல்லா விளையாடுனாலும்... வெற்றிகரமா 90 நாட்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு, திரைப்பட வாய்ப்புக்கு கொக்கி போட்டு வரும் ஷிவானிக்கு ஏனோ இப்போ வரை அவர் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கல.

அதே நேரம் சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் ஷிவானி அடிக்கடி விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரணகளம் செய்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது காஞ்சிபுர பட்டு புடவையில்... திருமணமான பெண் போல் வகுடில் குங்குமம் வைத்து போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்து குடும்ப குத்து விளக்காக ஷிவானி மின்னுவதாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இதையும் படிங்க: என்ன சிம்ரன் இதெல்லாம்? குட்டை பாடவையில் குதூகலம் பண்ணும் பூஜா ஹெக்டே!