சர்ச்சைகளுக்கு பெயர் போகாத நடிகர் விஷால் மற்றும் சுந்தர் சி கூட்டணியில் வெளிவந்த ஆம்பள, ஆக்சன், மதகஜராஜா ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று கொண்டாடப்பட்டன. இருவரின் கூட்டணியில் வெளிவந்த மெகா காமெடி படங்கள் மக்கள் மனதில் அழுத்தமான இடங்களை பிடித்து விட்டன என்றே சொல்லலாம். அந்த வகையில், ஆம்பள திரைப்படத்தில் விஷாலின் யதார்த்த நடிப்பும் குடும்ப உறவுகளை தேடிச் செல்லும் காட்சிகளும் மக்களின் மனதில் நீங்க இடத்தை பெற்றிருந்தது.
அதனைத் தொடர்ந்து சரியாக 12 ஆண்டுகளுக்கு முன்னர் இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் நடிகர் விஷால் சந்தானம் ஆகியோரின் நடிப்பில் உருவான மதகஜராஜா என்னும் திரைப்படம் கடந்த பொங்கல் அன்று வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் மீண்டும் விஷால் கம்பர் கொடுத்து விட்டார் என அவரது ரசிகர்கள் காலரை தூக்கி பெருமை பேசினர். நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு முழு நீள காமெடி படம் வந்துள்ளதால் சினிமா ரசிகர்களின் சமூக ஆதரவும் இந்த படத்திற்கு கிடைத்தது.
இதையும் படிங்க: ரோட்டர்டாம் படவிழாவில் விருதுபெற்ற BadGirl
இந்த வாய்ப்பை அப்படியே தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என நினைத்தாரோ என்னவோ, இயக்குனர் சுந்தர் சி மீண்டும் விஷாலுடன் மற்றொரு படத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் இருவரும் நான்காவது முறையாக மீண்டும் மற்றொரு படத்தில் இணைந்து உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பில் தயாராகும் இந்த படத்தில், விஷாலின் சம்பளம் 30 கோடி என தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இந்தப் படமும் காமெடி நிறைந்த படமாக தான் இருக்கும் என்றும் இதற்காக சந்தானமிடமும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக கிசுகிசுக்கள் எழுந்துள்ளன.
ஒருவேளை சுந்தர் சிக்கு சந்தானம் நோ சொல்லிவிட்டால் வடிவேலுவை களம் இறக்க நகர்வுகள் இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. ஏனெனில் சுந்தர் சி இயக்கத்தில் தற்போது நடைபெற்ற முடிந்த கேங்க்ஸ் என்னும் திரைப்படத்தில் வடிவேலு தான் நடித்துள்ளார். இது ஒரு புறம் இருக்க அவினி சினிமேக்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்தின் சூட்டிங் வருகின்ற பிப்ரவரி மாதம் இறுதியில் துவக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தொடரும் காஞ்சனா ஆட்டம்.. ராகவா லாரன்ஸ் கொடுத்த புதிய அப்டேட்.. குஷியான ரசிகர்கள்..