தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். இவர் நடிப்பில் சமீபத்தில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்கள் அடுத்தடுத்து வெளியானது. விடாமுயற்சி எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை என்றாலும் குட் பேட் அக்லி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் அவருக்கு நீண்ட இடைவேளைக்கு பிறகு கிடைத்த சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.

இந்த நிலையில் அஜித்தின் அடுத்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்குவார் என்றும் விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. சினிமா ஒருபுறம் இருக்க மறுபுறம் அஜீத்குமார் கார் ரேசிலும் ஆர்வம் காட்டி வருகிறார். தற்போது அவரது முழு கவனமும் கார் ரேசில் தான் உள்ளது.
இதையும் படிங்க: யார் காலில் விழுந்தார் நடிகர் அஜித்..? ஆசிர்வாதம் பெற்று ரேஸுக்கு சென்ற AK..!

இதன் காரணமாக அவருடைய அடுத்த படம் நவம்பரில் தான் தொடங்கும் என்று அவரே பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இந்நிலையில் அஜீத்குமார் யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கியுள்ளது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

இதுக்குறித்த அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திராவின் எக்ஸ் தன பதிவில், AJITHKUMAR RACING என்ற அதிகாரப்பூர்வ புதிய யூடியூப் சேனல் தொடங்கி உள்ளதாகவும் இதிலிருந்து, அஜித்குமார் ரேசிங் அணி பங்கேற்கும் ரேஸ்கள் அனைத்தும் இந்த யூடியூப் சேனலில் ஒளிபரப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: கார் ஓட்ட தெரியுமா தெரியாதா? அஜித்தை கிண்டலடித்த ப்ளூ சட்டை மாறன்...!