நடிகர் அஜித் குமார் திரைப்படத்தில் மட்டும் கில்லி அல்ல, ரேஸிலும் கில்லி தான். அந்த வகையில் தனக்கான அணியை திரட்டி, இந்தியாவிற்காக கார் ரேஸில் கலந்து கொண்டு போராடி வருகிறார். ஏற்கனவே நடந்த போட்டியில் பலமுறை அவருக்கு விபத்துக்கள் ஏற்பட்டாலும், களத்தில் விடாமுயற்சியுடன் போராடிய நடிகர் அஜித், ரேசராக தனது அணியை மூன்றாவது இடத்தில் நிலை நிறுத்தி வெற்றியைக் கண்டார். இந்த வெற்றியை தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மக்களும் கொண்டாடி தீர்த்தனர்.

இதனை அடுத்து, தனது அணிகளை அழைத்து கொண்டு பல நாடுகளுக்கு சென்று அங்குள்ள கார் பந்தயங்களில் கலந்து கொண்டு மிகுந்த பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஏற்கனவே, பிரான்சில் தனது ரேஸ் காரை பார்த்து மகிழ்ந்த அஜித்தின் வீடியோக்கள் பகிரப்பட்ட நிலையில், தற்பொழுது கார் ரேஸில் பங்கேற்று உள்ளார் நடிகர் அஜித். சமீபத்தில் GTA கார் பந்தயத்தில் தகுதி சுற்றில் தேர்வான அஜித்குமார், பிரான்சில் உள்ள பால் ரிக்கார்ட் சர்க்யூட் பந்தயத்தில் பங்கேற்றார்.
இதனை அடுத்து, அதே ரேஸில் நடிகர் அஜித்தின் கார் விபத்துக்குள்ளானது. இதனை பார்த்து ரசிகர்கள் வருத்தத்தில் இருக்க, ரேஸில் நடிகர் அஜித்தின் டீம் இரண்டாம் இடத்தை பிடித்து சாதித்து இருப்பதாக அறிவிப்பு வந்தவுடன் தான் அவர்களுக்கு உயிரே வந்தது. இந்த ரேஸில் ஜெயித்ததற்காக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கையால் 'பத்ம பூஷன்' விருதை பெற்றார் அஜித்.
இதையும் படிங்க: கார் ஓட்ட தெரியுமா தெரியாதா? அஜித்தை கிண்டலடித்த ப்ளூ சட்டை மாறன்...!

இந்த நிலையில், தற்போது அஜித்குமார் ரேலிங் அணி, ஜிடி 4 ஐரோப்பிய கார் பந்தயத்தில் கலந்து கொண்டுள்ளது. இந்தப் போட்டியின் இரண்டாவது சுற்றானது தொடங்கியது. அதில் நடிகர் அஜித்குமார் 'போர்ஷியா அணி' சார்பில் பங்கேற்றார். அப்போது, அஜித் ஓட்டிச் சென்ற காரின் டயர் வெடித்ததில் கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து நிகழ்ந்ததாக கூறப்பட்டது. அதில், நல்வாய்ப்பாக நடிகர் அஜித்குமார் எந்த வித பாதிப்பும் இல்லாமல், நலமுடன் மீட்கப்பட்டார். இதனை பார்த்த ரசிகர்கள் ஒருகணம் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

இந்த சூழலில், சமீபத்தில் நடிகர் அஜித் கொடுத்த பேட்டியில், நான் ரேஸ்களில் கலந்து கொள்ளும் நேரங்களில் சினிமாவில் நடிப்பதில்லை எனவும் சினிமாவில் நடிக்கும் பொழுது எந்த ரேஸ்களிலும் கலந்து கொள்ளப் போவதில்லை என்ற முடிவையும் தீர்க்கமாக எடுத்து உள்ளேன். இதுதான் சரியான வழியாக இருக்கும் என்றும் நம்புகிறேன். எனவே வரும் நவம்பர் மாதத்தில் எனது அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறேன். அந்த படம் அடுத்த ஆண்டு, அதாவது 2026ல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வெளியாகலாம் என்ற செய்தியை ரசிகர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

இதனை அடுத்து, அஜித் என்ன செய்வார் என பார்த்து கொண்டு இருக்கையில், இத்தாலியில் உள்ள புகழ்பெற்ற பார்முலா ஒன் கார் பந்தய வீரரான 'அயர்டன் சென்னா' சிலையின் காலில் விழுந்து நடிகர் அஜித் குமார் முத்தமிட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதன்படி, 1988, 1990, 1991 ஆண்டுகளில் மெக்லாரன் அணிக்காக பார்முலா 1 ரேஸில் கலந்து உலக சாம்பியன்ஷிப்பை வென்றவர் தான் பிரேசில் நாட்டைச் சேர்ந்த அயர்டன் சென்னா. இப்படி மிகவும் புகழ் பெற்ற வீரரான அவர், 1994ம் ஆண்டு மே 1ம் தேதி சான் மரினோ கிராண்ட் ப்ரீயில், வில்லியம்ஸ் என்ற அணிக்காக பந்தயத்தில் ஈடுபட்டபோது, தாம்புரெல்லோ என்று சொல்ல கூடிய வளைவில் விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் உலக நாடுகளை சோகத்தில் ஆழ்த்தியது. அவரது நினைவாகவே பிரேசிலில் ஏழை குழந்தைகளின் கல்விக்காக "சென்னா நிறுவனம்" இயங்குகிறது. அங்கு சென்ற அஜித் குமார் அயர்டன் சென்னா சிலையின் காலில் விழுந்து ஆசி பெற்றார்.
இதையும் படிங்க: சினிமாவில் இருந்து விலகுகிறாரா அஜித்..? ஒரே வார்த்தையால் அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்..!