தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான அனிருத் ரவிச்சந்தர், தனது தனித்துவமான இசையால் இளைஞர்களின் மனதை கவர்ந்து வருகிறார். 2012-ல் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய ‘3’ படத்தின் மூலம் ‘வொய் திஸ் கொலவெறி டி’ பாடலால் உலகளவில் புகழ் பெற்றார். இப்பாடல் யூடியூபில் 450 மில்லியனுக்கும் மேல் பார்வைகளை பெற்று சாதனை படைத்தது. தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் இசையமைத்து, இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்துள்ளார்.

ரஜினிகாந்தின் ‘பேட்ட’, ‘தர்பார்’, ‘ஜெயிலர்’, விஜய்யின் ‘கத்தி’, ‘மாஸ்டர்’, ‘லியோ’, ஷாருக்கானின் ‘ஜவான்’ உள்ளிட்ட படங்களில் அவரது இசை பெரும் வரவேற்பை பெற்றது. அனிருத்தின் பின்னணி இசையும், பாடல்களும் படங்களுக்கு உயிரூட்டுவதாக ரசிகர்கள் பாராட்டுகின்றனர். சமீபத்தில், ஜூனியர் என்.டி.ஆர் அவரை “இந்தியாவின் அடுத்த ஏ.ஆர். ரஹ்மான்” என புகழ்ந்தார். ‘கூலி’, ‘ஜெயிலர் 2’, ‘இந்தியன் 2’, ‘விடாமுயற்சி’ உள்ளிட்ட பல படங்களுக்கு தற்போது இசையமைத்து வருகிறார்.
இதையும் படிங்க: "Harris with Love": கோலாகலமாக நடந்த மியூசிக் கான்சர்ட்.. ஹாரிஸை கௌரவித்த கனடா அரசு..!
இந்நிலையில் தமிழ் திரையிசை உலகில் புயலாக வீசும் இளம் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தரின் “ஹுக்கும்” இசைக் கச்சேரி சென்னையில் வரும் ஆகஸ்ட் 23ம் தேதி கூவத்தூரில் நடைபெற உள்ளது. கூவத்தூர் பகுதியில் அமைந்துள்ள மார்க் சொர்ணபூமி எனும் இடத்தில் நடைபெற உள்ளது.
இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும், முன்பதிவு பற்றிய விவரங்களையும் அனிருத் வெளியிட்டுள்ளார். பல்லாயிர கணக்கான ரசிகர்கள் பங்கேற்கும் இந்த பிரம்மாண்ட இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனை டிஸ்ட்ரிக்ட் எனும் ஆப் மூலம் வரும் ஆகஸ்ட் 4 ம் தேதி மாலை 3 மணி அளவில் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாபெரும் இசை நிகழ்ச்சி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
https://x.com/i/status/1949765176515068328
தனது தனித்துவமான இசையால் இளைஞர்களின் மனதை கவர்ந்த அனிருத், இந்தக் கச்சேரியில் தனது முத்திரையை பதிக்க உள்ளார். இந்நிகழ்ச்சியில் அனிருத் தனது பிரபலமான பாடல்களான “வாட்ட கருவாடு”, “ஒய் திஸ் கொலைவெறி” உள்ளிட்ட ஹிட் பாடல்களை நேரடியாக பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பிரமாண்டமான ஒளி-ஒலி அமைப்புகள், நடனக் கலைஞர்களின் துள்ளல் நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்களின் பங்கேற்பு இதனை மறக்க முடியாத அனுபவமாக மாற்றும்.
இளைஞர்களின் உற்சாகத்திற்கு ஏற்ப, அனிருத் தனது எலக்ட்ரிக் கிதார், பியானோ மற்றும் சிந்தசைசர் மூலம் மேடையை மிரட்டுவார். இந்நிகழ்ச்சிக்கு 10,000 பேர் வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்பதால், ரசிகர்கள் முன்கூட்டியே முன்பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். முன்னதாக இதே நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக வெளியான தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தின; இருப்பினும், இந்த முறை அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாகத் திட்டமிடப்பட்டுள்ளன. அனிருத் ரசிகர்களுக்கு இசையால் ஆனந்தம் பரிமாற உள்ள இந்தக் கச்சேரி, சென்னையின் இசை வரலாற்றில் மற்றொரு மைல்கல்லாக அமையும்!
இதையும் படிங்க: சிக்கிட்டா சிக்கிட்டா..! கல்யாணம்.. அடுத்த நாளே 6 மாத கர்ப்பம்.. சிக்கலில் மாதம்பட்டி ரங்கராஜ்..!!