அதாவது, வெங்கடேஷிடம் இருந்து சட்டரீதியாக விவாகரத்து வாங்கிவிட்டு அறிவழகனுக்கு திருமணம் செய்து வைக்க திட்டமிடுகின்றனர். அறிவழகன் ரத்னா மனதில் இருக்கும் காதலை வெளியில் கொண்டு வருவதாக சொல்கிறான். சண்முகம் ரத்னாவுக்கும் உனக்கும் கல்யாணம் செய்து வைப்பதாக சொல்கிறான்.
இதையடுத்து அங்கு வந்து வெங்கடேஷ் என்கிட்டே இருந்து விவாகரத்து வாங்கிட்டு அவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க பாக்குறீங்களா என்ன சண்டையிட வக்கீல் ஏற்கனவே உன் மேல கேஸ் இருக்கு இந்த டைம்ல திரும்பவும் பிரச்னை பண்ணி உள்ள போல வெளியேவே வர முடியாது என எச்சரிக்கிறார்.

பரணி அமெரிக்கா போகாததால் சௌந்தர பாண்டி வெறுப்பில் இருக்க சிவபாலன் சௌந்தரபாண்டியை கிண்டல் அடிக்கிறான்.
இதைத்தொடர்ந்து வைஜெயந்தி வீட்டிற்கு மாலதி என்ற டீச்சர் வருகிறார். வைஜெயந்தி டீச்சரிடம் அறிவழகன் மற்றும் ரத்னா பற்றி சொல்கிறார். நீ அறிவழகனுடன் நெருங்கி பழகி உன் மேல பழியை போட்டு அவனையும் ரத்னாவையும் பிரிக்கணும். அப்போதான் அவ வெங்கடேஷுடன் சேர்ந்து வாழ்வாள் என்று சொல்கிறாள்.
இதையும் படிங்க: அமெரிக்கா கிளம்பிய பரணி! காதலை சொல்வானா ஷண்முகம்? - அண்ணா சீரியல் அப்டேட்!
இப்படி செய்தால் தப்பு செய்யாமல் ஜெயிலுக்கு சென்ற உன்னுடைய அண்ணனை விடுதலை செய்வதாக வைஜெயந்தி வாக்கு கொடுக்கிறாள். பிறகு மாலதியை வெங்கடேஷ்க்கு அறிமுகம் செய்து வைக்கிறான்.

மாலதி அறிவழகனுடன் நெருங்கி பழகியதும் நீ அவள கொன்னுடு அந்த பழி அறிவழகன் மேல விழும் அவன கைது செய்து உள்ள வைத்து விடலாம் என்று வைஜெயந்தி வெங்கடேஷுக்கு ஆர்டர் போடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை தொடர்ந்து பாருங்கள்.
இதையும் படிங்க: Anna Serial: கடத்தப்படும் கனி..! காதல் வலையில் சிக்கிய வீரா? அண்ணா சீரியல் அப்டேட்!