• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, July 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    வயசோ 61.. செயலோ 21..!! 90ஸ்களின் வயித்தெரிச்சலை கொட்டிக்கொண்ட அமீர்கான்.. 3வது திருமண மீம்ஸ்கள் தான் ட்ரென்டிங்..!

    அமீர்கானின் மூன்றாவது திருமணத்தை ஏற்றுக்கொள்ள முடியாத 90ஸ் கிட்ஸ்கள் நகைச்சுவையாக மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.
    Author By Bala Mon, 06 Jul 2026 11:57:34 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-aamir-khan-marries-longtime-partner-gauri-spratt-in-intimate-registered-wedding-ceremony-tamilcinema

    இணையத்தில் ஒரு செய்தி டிரெண்டானாலே போதும்... அதைவிட வேகமாக டிரெண்டாகுவது மீம்ஸ்கள்தான். அந்த வகையில், பாலிவுட் நடிகர் அமீர் கான் குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் திருமணத் தகவல்களைத் தொடர்ந்து, இணையவாசிகள் உருவாக்கிய நகைச்சுவை பதிவுகள் மற்றும் மீம்ஸ்கள் தற்போது சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளன. திருமணத்தை விட அதை வைத்து நெட்டிசன்கள் செய்த காமெடிகள்தான் பலரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளன.

    சமூக வலைதளங்களில் ஏதாவது ஒரு பிரபலத்தின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய தகவல் வெளியானால், அதைப் பற்றி முதலில் பேசுவது ரசிகர்கள். அடுத்த நிமிடமே மீம் கிரியேட்டர்கள் களமிறங்கிவிடுவார்கள். இந்த முறையும் அதே கதைதான். "திருமணம்" என்ற வார்த்தை டிரெண்டாகத் தொடங்கியதும், இணையம் முழுவதும் மீம்களின் மழை பெய்ய ஆரம்பித்தது.

    குறிப்பாக அமீர் கானுக்கு தற்போது  61வயசு.. இந்த வயசுல 47 வயசு கௌரி ஸ்பார்ட்டினை கல்யாணம் செஞ்சி இருக்காரு. அதுவும் இது அமீர் கானுக்கு நடந்த மூன்றாவது திருமணம். இந்த நிலையில் இதைப்பார்த்து கடுப்பான 90ஸ் கிட்ஸ்.. தங்களின் மனநிலையை பிரதிபலிக்கும் பதிவுகளை பகிர்ந்து தான் இப்போ அதிக கவனம் பெற்றுள்ளன. அதில் "எங்களுக்கே இன்னும் வீட்டில் ஜாதகம் சுற்றிக்கொண்டிருக்கிறது... ஆனால் சிலருக்கு வாழ்க்கை மூன்றாவது சீசனுக்கே போய்விட்டது!" என்ற வாசகத்துடன் வெளியான மீம்கள் லட்சக்கணக்கான பார்வைகளை குவித்தன.

    இதையும் படிங்க: கிரிக்கெட் வீரர் நிச்சயதார்த்தம் பண்ணாரு.. இப்ப ஏமாத்திட்டு போய்ட்டாரு..!! ரொம்ப ஃபீலிங்கா இருக்கு.. ஆக்ரித்தி அகர்வால் ஓபன் டாக்..!

    Aamir Khan

    மற்றொரு மீமில், ஒரு இளைஞர் கண்ணாடி முன் நின்று தலைமுடியைச் சீவிக்கொண்டே, "இந்த வருடமாவது கல்யாணம் ஆகும்னு நினைச்சேன்... இப்போ இன்னொருத்தருக்கு கல்யாண நியூஸ்!" என்று புலம்புவது போல எடிட் செய்யப்பட்டிருந்தது. அதற்கு கீழே, "90ஸ் கிட்ஸ் தேசிய சங்கம் சார்பில் ஆழ்ந்த வருத்தம்" என்று எழுதப்பட்டிருந்தது.

    அதிலும் சில மீம் பக்கங்கள் இன்னும் ஒரு படி மேலே சென்று, "எங்களோட அம்மா தினமும் கேட்கும் கேள்வி – 'ஊர்ல இருக்கவனுக்கெல்லாம் கல்யாணம் நடக்குது... ஆனா உனக்கு ஒரு கல்யாணம் நடக்கமாட்டிகிதே?' என சொல்லுறாங்களாம். இணையத்தில் தினமும் காட்டும் செய்தி – 'இவருக்கு ஒரு முறையாவது கல்யாணம் பண்ணிவிங்கப்பா'" என்று பதிவிட்டிருந்தன. இந்த பதிவு பலரின் "ரிலேட்டபிள்" பட்டியலில் இடம்பிடித்தது.

    இணையவாசிகள் கற்பனைக்கும் எல்லையே இல்லாதவர்கள் என்பதற்கு மற்றொரு உதாரணமாக, "மாப்பிள்ளை மேடைக்கு போகும் முன் 90ஸ் கிட்ஸ்கள்" என்ற தலைப்பில் காலியாக இருக்கும் திருமண மண்டப நாற்காலியின் புகைப்படமும் வைரலானது. அதற்குக் கீழே, "இது நம்ம ரிசர்வ் சீட்... அழைப்பு மட்டும் வரலை" என்று குறிப்பிட்டிருந்தனர். சிலர், "திருமண வயசு என்ற ஒன்றை உருவாக்கியது யார்?" என்ற தத்துவக் கேள்வியையும் நகைச்சுவையாக எழுப்பினர். "வயசு என்பது ஆதாரில் இருக்கும் எண்... வீட்டில் கேட்கப்படும் கேள்விதான் உண்மையா அசிங்கமா இருக்கு குமாரு" என்று ஒருவர் எழுதிய பதிவு பல ஆயிரம் பகிர்வுகளைப் பெற்றது.

    Aamir Khan

    அதே சமயம், சில சமூக வலைதள பயனர்கள் வயதை காரணமாகக் கொண்டு ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிப்பது சரியல்ல என்றும் கருத்து தெரிவித்தனர். "ஒருவர் திருமணம் செய்யலாமா வேண்டாமா, எப்போது செய்ய வேண்டும் என்பது அவருடைய தனிப்பட்ட முடிவு. அதைப் பற்றி தேவையற்ற விமர்சனம் செய்வதை விட வாழ்த்துவது நல்லது" என்ற கருத்துகளும் பரவலாகப் பகிரப்பட்டன.

    இந்த விவாதத்திலும் நகைச்சுவையை விடாமல், "90ஸ் கிட்ஸ்கள் இப்போது இரண்டு விஷயங்களுக்குத்தான் பயப்படுகிறார்கள். ஒன்று வீட்டில் வரும் 'மாப்பிள்ளை பார்க்க' வருவதாக வரும் போன்கால். இன்னொன்று இணையத்தில் வரும் 'மற்றொரு திருமண' நியூஸ்!" என்ற மீமும் இணையத்தில் வைரலானது.

    சிலர் இதை கிரிக்கெட் போட்டியுடன் ஒப்பிட்டு, "நாங்க இன்னும் டாஸ் கூட போடலை... சிலர் ஹாட்ரிக் அடிச்சுட்டாங்க" என்று பதிவு செய்திருந்தனர். அந்த மீமுக்கு கீழே ஆயிரக்கணக்கானோர் சிரிப்பு எமோஜிகளை பதிவிட்டனர். இந்த நகைச்சுவை பதிவுகளுக்கு நடுவிலும், பல இணையவாசிகள் ஒரு முக்கியமான கருத்தை முன்வைத்தனர். "வயது, திருமணம், தனிப்பட்ட வாழ்க்கை ஆகியவை ஒவ்வொருவரின் சொந்த விருப்பம். அதை கேலி செய்வதை விட, மீம்களை சிரிப்புக்குள் மட்டுமே வைத்துக்கொள்வது நல்லது" என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

    Aamir Khan

    இதற்கிடையில், சிலர் தங்களையே கலாய்த்துக் கொண்டும் பதிவுகள் வெளியிட்டனர். "நம்ம காதல் கதைக்கு இன்னும் ஹீரோயின் என்ட்ரியே இல்லை... ஆனால் மீம்ஸ்ல மட்டும் நாம்தான் ஹீரோ!" என்ற வாசகம் பலரின் கவனத்தை ஈர்த்தது. மொத்தத்தில், இணையத்தில் ஒரு தகவல் வெளியானவுடன் அதை விட வேகமாக மீம்கள் உருவாகும் காலத்தில் வாழ்கிறோம் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணமாக மாறியுள்ளது. ஆனால், இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ள நகைச்சுவைகள் அனைத்தும் சமூக வலைதளங்களில் பரவும் மீம் கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டவை மட்டுமே. சம்பந்தப்பட்ட நபர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை இழிவுபடுத்தும் நோக்கமல்ல.

    இதையும் படிங்க: அரசியலா.. சினிமாவா.. புதிய அறிவிப்பை வெளியிட்ட ராகவா லாரன்ஸ்..!! இப்படி ஒரு அப்டேட் கொடுப்பாருன்னு நினைக்கல..!

    மேலும் படிங்க
    கர்நாடக முதல்வர் பேசுவது பொய்..! போர்க்கால நடவடிக்கை தேவை... அன்புமணி வலியுறுத்தல்..!!

    கர்நாடக முதல்வர் பேசுவது பொய்..! போர்க்கால நடவடிக்கை தேவை... அன்புமணி வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    இத்தாலி பிரதமர் மெலோனியை மீண்டும் சீண்டிய ட்ரம்ப்! போட்டோ போட்டு கிண்டல் கமெண்ட்!

    இத்தாலி பிரதமர் மெலோனியை மீண்டும் சீண்டிய ட்ரம்ப்! போட்டோ போட்டு கிண்டல் கமெண்ட்!

    உலகம்
    EGG லவ்வர்ஸ்-ஆ நீங்கள்..?? தினசரி உணவில் சிறந்த நண்பனா அல்லது எச்சரிக்கை தேவையா..??

    EGG லவ்வர்ஸ்-ஆ நீங்கள்..?? தினசரி உணவில் சிறந்த நண்பனா அல்லது எச்சரிக்கை தேவையா..??

    உடல்நலம்
    மொபைல் ரீசார்ஜ் இப்போவே பண்ணிக்கோங்க! 3 மாசத்துல கண்ணா பின்னானு எகிற போகுது! வார்னிங் அலர்ட்!

    மொபைல் ரீசார்ஜ் இப்போவே பண்ணிக்கோங்க! 3 மாசத்துல கண்ணா பின்னானு எகிற போகுது! வார்னிங் அலர்ட்!

    தமிழ்நாடு
    ஒன்றுக்கு மூன்றாக வசூலிப்போம்!!  பொதுசொத்துகள் சேதம்?! மேற்குவங்க பாஜக அரசு வார்னிங்!

    ஒன்றுக்கு மூன்றாக வசூலிப்போம்!! பொதுசொத்துகள் சேதம்?! மேற்குவங்க பாஜக அரசு வார்னிங்!

    இந்தியா
    பட்ஜெட்டில் இடம்பெறும் புதிய அறிவிப்புகள்?!  உயர்க்கல்வித்துறை அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

    பட்ஜெட்டில் இடம்பெறும் புதிய அறிவிப்புகள்?! உயர்க்கல்வித்துறை அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

    அரசியல்

    செய்திகள்

    கர்நாடக முதல்வர் பேசுவது பொய்..! போர்க்கால நடவடிக்கை தேவை... அன்புமணி வலியுறுத்தல்..!!

    கர்நாடக முதல்வர் பேசுவது பொய்..! போர்க்கால நடவடிக்கை தேவை... அன்புமணி வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    இத்தாலி பிரதமர் மெலோனியை மீண்டும் சீண்டிய ட்ரம்ப்! போட்டோ போட்டு கிண்டல் கமெண்ட்!

    இத்தாலி பிரதமர் மெலோனியை மீண்டும் சீண்டிய ட்ரம்ப்! போட்டோ போட்டு கிண்டல் கமெண்ட்!

    உலகம்
    மொபைல் ரீசார்ஜ் இப்போவே பண்ணிக்கோங்க! 3 மாசத்துல கண்ணா பின்னானு எகிற போகுது! வார்னிங் அலர்ட்!

    மொபைல் ரீசார்ஜ் இப்போவே பண்ணிக்கோங்க! 3 மாசத்துல கண்ணா பின்னானு எகிற போகுது! வார்னிங் அலர்ட்!

    தமிழ்நாடு
    ஒன்றுக்கு மூன்றாக வசூலிப்போம்!!  பொதுசொத்துகள் சேதம்?! மேற்குவங்க பாஜக அரசு வார்னிங்!

    ஒன்றுக்கு மூன்றாக வசூலிப்போம்!! பொதுசொத்துகள் சேதம்?! மேற்குவங்க பாஜக அரசு வார்னிங்!

    இந்தியா
    பட்ஜெட்டில் இடம்பெறும் புதிய அறிவிப்புகள்?!  உயர்க்கல்வித்துறை அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

    பட்ஜெட்டில் இடம்பெறும் புதிய அறிவிப்புகள்?! உயர்க்கல்வித்துறை அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

    அரசியல்
    TTV தினகரனை கூப்பிடுங்க..! எடப்பாடிக்கு மீண்டும் அழுத்தம்... மாறுமா அரசியல் களம்..?

    TTV தினகரனை கூப்பிடுங்க..! எடப்பாடிக்கு மீண்டும் அழுத்தம்... மாறுமா அரசியல் களம்..?

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share