ஒரு காலத்தில் தமிழ்த் திரையுலகில் சாக்லேட் ஹீரோவாக ரசிகைகளின் இதயங்களை கவர்ந்தவர் தான் நடிகர் அப்பாஸ். 1996-ம் ஆண்டு வெளிவந்த ‘காதல் தேசம்’ திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமான அப்பாஸ், தனது அழகான தோற்றமும் மென்மையான நடிப்புத்திறன் மூலம் அதே வருடம் வெளிவந்த விஐபி, பூச்சூடவா, ஜாலி உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார். அதன் பின்பும், கமல்ஹாசனுடன் ஹேராம், பம்மல் கே.சம்மந்தம், ரஜினிகாந்துடன் படையப்பா, தோழா, மின்னலே, ரஜா, போன்ற வெற்றிப்படங்களில் அப்பாஸ் நடித்ததன் மூலம், அவர் ஒரு மிகப்பெரிய முன்னணி நடிகராக வலம் வந்தார்.
தமிழுடன் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்து, பாண் இந்திய ஸ்டாராக மாறி அதிகளவு ரசிகர்களையும் பெற்றிருந்தார். இந்த நிலையில், 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்ததையடுத்து, பட வாய்ப்புகள் குறைந்ததைக் காரணமாகக் கொண்டு, கடந்த 10 ஆண்டுகளாகத் திரையுலகில் இருந்து ஒதுங்கியிருந்தார் அப்பாஸ். தனது குடும்பத்துடன் நியூசிலாந்துக்கு சென்ற அவர், அங்கு முழுமையாக குடிபெயர்ந்து குடும்ப வாழ்க்கையை அழகாக வாழ்ந்து வந்தார். இதையடுத்து, தமிழ் சினிமா ரசிகர்கள் அவரை திரையிலே காண முடியாத நிலை ஏற்பட்டது. இப்படி இருக்க இப்பொழுது, சினிமாவில் ஒரு முக்கிய திருப்பமாக, நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் திரையுலகில் கால் வைக்க உள்ளார் நடிகர் அப்பாஸ். அவரின் இந்த 'ரீ என்ட்ரி' செய்தி தற்போது சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

மரியா ராஜா இளஞ்செழியன் இயக்கும் புதிய திரைப்படத்தில் ஜிவி பிரகாஷ் கதாநாயகனாக நடிக்க, அதில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் அப்பாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளாராம். இது அவரது சினிமா பயணத்திற்கு மீண்டும் ஒரு புதிய தொடக்கமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படம், பியாண்டு பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக ஜெயவர்த்தனன் தயாரித்து வருகிறார். முழுமையான பொழுதுபோக்கு திரைப்படம் ஆக உருவாகும் இப்படம், மாடர்ன் யூத் சென்டிமென்ட், நகைச்சுவை, உணர்வுகள் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் விதமாக இருக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இப்படத்தின் மூலமாக அப்பாஸ் திரும்ப வருவதாக வந்த தகவலுக்குப் பிறகு, ரசிகர்கள் சமூக வலைதளங்களில் உற்சாகமாக அவரது புகைப்படங்கள், பழைய காட்சிகள், அவரின் நடிப்பை பாராட்டும் பதிவுகள் ஆகியவற்றை பகிர்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு நோட்டிஸ்..! ED அதிகாரிகளை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய நீதிபதி..!
குறிப்பாக, "சாக்லேட் பாயின் ரீ என்ட்ரிக்கு எங்கள் வாழ்த்துகள்", "அப்பாஸ் ரீ எண்ட்ரி...சூப்பர் சார்" என பல ரசிகர்கள் பெருமகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும், திரையுலகிலும் அவருடைய என்ட்ரி-யை பல முன்னணி இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் வரவேற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகின்றன. இவரது நடிப்பில் படங்கள் எப்போது வெளியாகும், எதிர்கால திட்டங்கள் என்ன என்பது குறித்தும் தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இப்படி இருக்க, அப்பாஸ் ஒரு காலத்தில், வெள்ளைப் பத்திரம் போல ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருந்தவர். அவரது நடிப்புத் திறன், தன்னம்பிக்கை, சில நிகழ்ச்சிகளில் நேர்மையான மனநிலையில் அவர் பேசியது என அனைத்தும் அவரை மற்ற நடிகர்களில் இருந்து வேறுபடுத்தி காண்பித்தது. அவரைப் போன்ற கலைஞர்கள் திரையுலகை விட்டு விலகும் போது, அந்த இடத்தை நிரப்புவது கடினம் என்பதை மீண்டும் நிரூபிக்கிறது. அப்பாஸ் நடிக்கும் இந்த புதிய திரைப்படம் குறித்த தரமான அப்டேட்கள், முன்னோட்ட போஸ்டர்கள், படக்குழுவின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் என பல விஷயங்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. திரைப்படத்தின் தயாரிப்பு மற்றும் படப்பிடிப்பு பணிகள் தற்போது விரைவாக நடந்து வருவதாகத் தெரிகிறது.

படம் பற்றிய விவரங்கள், கதையமைப்பு, மற்ற நடிகர்கள் பற்றிய தகவல்களும் விரைவில் வெளியிடப்படும். நடிகர் அப்பாஸ், ஒரு காலத்தில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நட்சத்திரமாக இருந்தவர். பல வருடங்களுக்குப் பிறகு அவர் திரையுலகிற்கு மீண்டும் வருவதை ரசிகர்கள் மட்டும் அல்லாமல், திரை உலகமே மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்கிறது. இது அவரது ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சிக்குரிய தருணமாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: உங்களுக்கு தெரியுமா "பேய் தான் என்னை காப்பாற்றியது"...! ‘ஜென்ம நட்சத்திரம்’ பட விழாவில் நடிகர் தமன் அக்ஷனின் பேச்சு வைரல்..!