பான் இந்தியா நடிகராக வலம் வரும் நடிகர் பிரபாஸ், தொடர்ந்து வித்தியாசமான கதைகளில் நடித்து தன்னை சினிமா உலகில் நட்சத்திர நாயகனாக நிலைநாட்டி வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான 'கண்ணப்பா' திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படம் மட்டும் பார்ப்பதற்கு அருமையாக மட்டுமல்லாமல், அதன் கதைக் கூறும் வீதம், காட்சிகள், பிரபாஸின் சிறப்பு தோற்றம் என அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெரும் வகையில் உள்ளது. இந்நிலையில், தற்போது பிரபாஸ் நடித்துவரும் அடுத்த பெரிய படம் என்றால் அதுதான் ‘தி ராஜா சாப்’.
இந்த திரைப்படத்தை தெலுங்கு சினிமாவில் நன்கு அறியப்படும் இயக்குநரான மாருதி இயக்கி வருகிறார். இவர் ஒரு பக்கத்தில் காதலும் நகைச்சுவையும் கலந்த அருமையான படங்களை இயக்கியவர், இந்த முறையோ ஹாரர் - திரில்லர் கதையம்சத்தில் இயக்கும் புதிய முயற்சியுடன் நம் முன்னிலையில் வந்திருக்கிறார். இந்த திரைப்படம் வரும் டிசம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகமாக உருவாக்கியுள்ளது. இந்த ஹாரர் திரில்லர் கதையம்சம் கொண்ட படத்தில், பிரபாஸ் ஒரு புது தோற்றத்தில் மாறி நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது வரை அவர் நடித்த பெரும்பாலான படங்களில் காமெர்ஷியல் ஹீரோயிசம் கொண்ட கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்திருந்த பிரபாஸ், இந்த முறை, உருமாறிய ஹீரோவாக, கொஞ்சம் குழப்பம் மற்றும் மர்மம் நிறைந்த கதாபாத்திரத்தில் நடிப்பது ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வருகிறது. இப்படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரிக்கும் இந்த நேரத்தில், சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் பிரபாஸின் புகைப்படம் ஒன்று வைரலாக பரவி வருகிறது.

அந்த புகைப்படத்தில், பிரபாஸ் தனது வழக்கமான ஸ்டைலிஷ் தோற்றத்திலிருந்து முற்றிலுமாக விலகி, தலையில் முடி மிகக் குறைவாக, சொட்டை விழுந்தது போல தோன்றும் வித்தியாசமான லுக்கில் இருக்கிறார். அவர் முகத்திலும் சிறிது சோர்வு, கவலை போன்ற உணர்வுகள் பிரதிபலிப்பதுபோல் அதில் தெரிகிறது. இந்த புகைப்படம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவ ஆரம்பித்தவுடன், பல ரசிகர்களும், நெட்டிசன்களும் அதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இந்தனை பார்த்த பலரும், "பிரபாஸ் எதற்காக இப்படியொரு டராஸ்டிக் லுக்கை தேர்ந்தெடுத்தாரா? அல்லது இது அவரது உண்மையான புகைப்படமா? அல்லது அவருக்கு ஏதாவது உடல்நிலை பிரச்சனையா?" என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதையும் படிங்க: கனவில் வந்த திருவேற்காடு கருமாரியம்மன்..! மடிப்பிச்சை எடுத்து காணிக்கை செலுத்திய நடிகை நளினி..!
அதே நேரத்தில், சில நெட்டிசன்கள் அந்த புகைப்படத்தை மீம்களாக மாற்றி, நகைச்சுவையான கமெண்ட்களோடு சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். இந்த புகைப்படம் குறித்து சில நெட்டிசன்கள், புகைப்படத்தில் ஏற்பட்டுள்ள சில வித்தியாசங்களை குறிப்பிட்டு, இது முதலில் உண்மையான புகைப்படமே அல்ல என்ற கருத்துகளை எழுப்பி இருக்கின்றனர். தொடர்ந்து நடந்த விசாரணையில் இது ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படம் என்பது உறுதிபட தெரிகிறது. மேலும் பிரபாஸ் தனது திரைப்படத்திற்காக வித்தியாசமான தோற்றங்களை முயற்சி செய்து வருகிறார் என்றாலும், இந்த புகைப்படம் அவர் மாறிய தோற்றத்தை காட்டும் ஏஐ புகைப்படம் என கூறப்படுகிறது. இந்த புகைப்படம் வேகமாக பரவியதையடுத்து, பிரபாஸின் ரசிகர்கள் மற்றும் சமூக ஊடகங்களில் அவரை விமர்சிக்கும் நெட்டிசன்களிடையேயும் அதிகப்படியான மோதல் மோதல் உருவாகியுள்ளது.

பிரபாஸின் ஹேர் லுக்கை பற்றிய வைரல் புகைப்படம், உண்மையில் அவருடைய புதிய தோற்றமல்ல, அது ஏ.ஐ.-ல் உருவாக்கப்பட்ட படமென உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இது மூலம் ஒரு முக்கியமான செய்தி மக்கள் முன்னிலையில் வந்துள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சி எவ்வளவு பயனுள்ளதாக இருந்தாலும், அதை தவறாக பயன்படுத்தும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது.
இதையும் படிங்க: காதலும் கலாட்டாவும் கலந்த ஸ்வீட் படம் தான் 'பன் பட்டர் ஜாம்'..! பிக் பாஸ் ராஜுவின் ஹீரோ அவதாரம் அல்டிமேட்..!