தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தையும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடமும் பிடித்த ஒரே நடிகர் என்றால் அவர் தான் நடிகர் அஜித் குமார். இவர் தற்போது திரைத்துறையில் இருந்து சற்று விலகி, தனக்கு மிகவும் பிடித்த கார் பந்தயத்தில் முழு நேர ஈடுபாடுடன் பயணித்து வருகிறார். மிகவும் பிரமாண்டமான வெற்றிப்படங்களில் நடித்த சூப்பர் ஹீரோ என்ற பெயரை மட்டுமல்லாமல், திறமையான ரேசிங் டிரைவராகவும் அஜித் மக்கள் மத்தியில் அறியப்படுகிறார். இப்படி இருக்க, அஜித் தற்போது பங்கேற்று வரும் GT4 European Series என்பது, உலக அளவில் பெயர்பெற்ற, உயர் தர பந்தயமாக பார்க்கப்படுகிறது.
இதில் பங்கேற்பது என்பது சாதாரண விஷயம் அல்ல, இதற்கென பிரத்யேக பயிற்சி, தைரியம், ஓட்டும் திறன் ஆகியவை அவசியமாக இருக்கிறது. அஜித் கடந்த சில மாதங்களாகவே இந்த பந்தயத்திற்கு தீவிரமாக பயிற்சி மேற்கொண்டதோடு, பல்வேறு சுற்றுகளிலும் போட்டியிட்டுள்ளார். இதனால், அவர் பங்கேற்கும் ஒவ்வொரு சுற்றும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற GT4 ஐரோப்பிய சீரிஸ் பந்தயத்தின் ஒரு சுற்றில், நடிகர் அஜித் சிறிய விபத்துக்குள்ளாகியுள்ளார். வளைவுகளில் திரும்பும் போது, முன்பே பழுதடைந்து நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு பந்தயக் கார் மீது நேரடியாக மோதியது. இதனால் அஜித் ஓட்டிய காரின் முன் பகுதிகளில் கடுமையாக சேதமடைந்தது. இந்த சம்பவம் பந்தயத்தின் போது திடீரென நிகழ்ந்தாலும், அதிர்ஷ்டவசமாக அஜித்திற்கு எந்தவிதமான காயமும் ஏற்படவில்லை என்பது முக்கிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தனது பாசத்தால் பூனையை மயக்கிய நடிகர் அஜித்குமார்..! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!
பாதுகாப்பு அம்சங்கள் அனைத்தும் சரியாக செயல்பட்டதன் காரணமாக, அவர் முழுமையாக பாதுகாப்பாக இருந்தார். பந்தய நிர்வாகிகள் உடனடியாக அவரை மீட்கும் பணிகளை மேற்கொண்டனர், இந்த சம்பவம் நடந்து சில நிமிடங்களில் அஜித் பாதுகாப்பாக காரில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதற்கு முன்பும், அஜித் பங்கேற்ற சில பந்தயங்களில் சிறிய அளவிலான விபத்துகள் நிகழ்ந்திருந்தன. இந்த விபத்து நிகழ்ந்த பின்னர், ரசிகர்கள் மற்றும் திரையுலகத்தினர் அஜித்தின் நலனைப் பற்றி சமூக வலைதளங்களில் தொடர்ந்து விசாரித்து வந்தனர். அதற்கிடையில் அவரது நெருங்கிய வட்டாரங்கள் மற்றும் பந்தய நிர்வாகிகள், “அஜித் நலமாக இருக்கிறார். அவர் மீண்டும் பந்தயத்திற்கே திரும்பத் தயாராக உள்ளார்,” என தெரிவித்தனர்.

இந்நிலையில், ரசிகர்களுக்கு மேலும் ஒரு பெரிய சான்றாக, அஜித் மிக விரைவில் தனது அடுத்த திரைப்படத்தையும் தொடங்க இருக்கிறார். அவரை வைத்து ‘குட் பேட் அக்லீ’ படத்தை இயக்கிய இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தை ரசிகர்களுக்காக கொடுக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அனிருத் இசை நிகழ்ச்சி திடீர் மாற்றம்...! புதிய தேதி மற்றும் இடம் விரைவில் அறிவிப்பு..!